நடைபயிற்சி (Walking) என்பது நமது உடலுக்கும், எலும்புகளோட ஜாயிண்டுகளுக்கும் ஒரு ப்ளக்சிபிளிட்டி கிடைக்குது. நடக்கும்போது கால் தசைகளின் பவர் அதிகமாகும். அதனால் இதயத்திற்கும் பலம் கிடைக்கும். அதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும். கொஞ்சம் கொஞ்சமா இதைச் செய்யும்போது தான் நமக்கு உடல் எடையும் குறையும்.
முதலில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் தினமும் 5 நாள்களுக்கு 10 நிமிடம் காலையும், மாலை 10 நிமிடமும் நடக்கலாம். இதைப் படிப்படியாக அதிகரித்து ஒரு நாளைக்கு 1 மணி நேரம் நடக்கலாம்.
பார்க்ல போய் யாரு கூடயாவது பேசிக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா நின்னுக்கிட்டே பேசிக்கிட்டு இருக்கக்கூடாது. நடக்கும்போது பாதை சீராக இருக்கணும். அது மட்டுமல்லாமல் கொஞ்சம் மேடான இடத்தில் நடந்தால் இன்னும் நமது உடற்திறன் அதிகரிக்கும். நடைபயிற்சி மேற்கொள்ளும்போது நமது காலணிகள் நேராக இருக்கணும். அதற்கு தகுந்த ஷூக்களையும் பயன்படுத்தலாம்.
ஆரம்பத்தில் ஸ்லோவாகப் போகணும். போகப் போகத்தான் வேகமாகப் போகணும். முதலில் ஆவரேஜா நடக்கணும். அடுத்து ஸ்பீடா நடக்கணும். மொபைல்லயே இதற்கான ஆப் இருக்கு. 1 கிமீ நடக்க 12 நிமிடங்களில் நடக்கலாம். 1 மணி நேரத்துக்கு 6.4கிமீ நடக்கலாம். இது ஆவரேஜ் ஸ்பீடா நடக்குறவங்களுக்கு. இன்னும் ஸ்பீடா நடப்பவர்கள் 1 மணிக்கு 8 கிமீ நடக்கலாம்.
தினமும் 10ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்கணும். வாக்கிங் போகும்போது நடக்குற ஸ்டெப்ஸ்சைத் தான் கணக்குப் பண்ணனும். ஆரம்பத்தில் 3 ஆயிரத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். வாக்கிங் நடக்கும்போது ஹார்ட் ரேட் மிக முக்கியமான விஷயம். நாம எந்தளவு எஃபோர்ட் போடறோம்? நாம எவ்வளவு கேலரியை எரியூட்டுறோம் என்பதுதான்.
நாம லெவலை மீறிப் போனால் கன்ட்ரோல் பண்ணிக்கணும். 220 – உங்க வயது. உதாரணத்துக்கு உங்க வயது 20ன்னா 220-20 x 0.85ஆல் பெருக்கினால் எவ்வளவு வருதோ அதுதான் உங்களோட இதயத்துடிப்பு. ஒரு நிமிடத்துக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கலாம். 93 ல இருந்து 153 வரைக்கும் சராசரியா இருக்கலாம்.
ஹார்ட்ரேட்டா கால்குலேட் பண்ணி வாக்கிங் போனா 2 பலன்கள் கிடைக்குது. படபடன்னு வருவது, மயக்கம் வருவது, சிலருக்கு ஐஎச்டின்னு சொல்வாங்க. அவங்க எல்லாம் நடக்கும்போது இதைப் பார்த்துக்கணும். இன்னொன்;;;னு என்னன்னா நம்ம கரெக்டா நடக்குறோம். நம்ம கலோரிகள் எரிக்கப்படுதுன்னும் தெரிஞ்சிக்கலாம். சர்ஜரி பண்ணினவங்க மூட்டு வலி உள்ளவங்க மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கணும். மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம் உள்ளவர்கள் பேன்டேஜ் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடக்கலாம்.
மூட்டு எலும்புத் தேய்மானம் வருவதற்குக் காரணம் காலில் உள்ள தசைகள் பலவீனமாக இருப்பதும் காரணம். அதனால் எலும்புகள் ஒன்றுக்கொன்று உராய ஆரம்பிக்கும். அதனால்தான் மூட்டு எலும்புத் தேய்மானம் வருது. கால் தசைகள் நல்லாருக்கணும்னா கண்டிப்பாக வாக்கிங் போகணும். எல்லாருமே வாக்கிங் போகணும். இதய நோயாளிகள் எல்லாரும் ஹார்ட்ரேட்டிங்கைக் கணிச்சிட்டு வாக்கிங் போனால் இது நல்ல பயன்தரக்கூடிய உடற்பயிற்சி. மேற்கண்ட தகவல்களை காஸ்மோ ஹெல்த் சித்த மருத்துவர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார்.