கொழுப்பு கட்டிகள் சிலருக்கு அதிகமாக உடலில் குறிப்பாக கை மற்றும் வயிறு, இடுப்புப் பகுதிகளில் வருவதுண்டு. அதை எப்படி நீக்குவதுன்னு பிரபல மருத்துவர் தீபா அருளாளன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
தோலுக்கும், தசைப்பகுதிக்கும் இடையே கொழுப்பினால் ஆன ஒரு படிவம் உள்ளது. இதுல 2 வகையான கொழுப்பு உள்ளது. பிரவுன் கொழுப்பு, ஒயிட் கொழுப்பு என இரு வகை உள்ளது. மைட்டோகாண்ட்ரியா உள்ளது பிரவுன் கொழுப்பு. வயிற்றில் சதை தொங்கினால் அது வெள்ளை கொழுப்பு. முழுக்க முழுக்க கொழுப்பினால் ஆனது. கொழுப்பு செல்கள் அதிகரித்து தோலை ஊடுருவி அதற்குக் கீழே உட்கார்ந்து கட்டியாகி விடுகிறது. இதை லைப்போமா என்பர்.
இது கேன்சர் அல்லாத கட்டி. கேன்சர் ஆகிடுமோ என பயம். 99 சதவீதம் அதற்கு வாய்ப்பு இல்லை. நிறைய மது அருந்துபவர்களுக்கு கேன்சர் வாய்ப்பு உண்டு. எண்ணை பலகாரங்கள் நிறைய சாப்பிடுபவர்களுக்குத் தான் இந்த கொழுப்புக்கட்டி அதிகம் வரும். அது பெரிதாகி பக்கத்தில் உள்ள நரம்பை அழுத்துதோ அப்போ அதை எடுத்து விட வேண்டும்.
நல்லெண்ணையும், மஞ்சளையும் சேர்த்து கொழுப்புக்கட்டியில் தடவலாம். முட்டையின் வெள்ளை, உப்பு சேர்த்து தடவலாம். இது கொழுப்புக்கட்டியைச் சற்றே சுருக்கி விடும். கட்டியை நகர்த்தினால் அது ஓடும். இது லைப்போமா. வெறும் கொழுப்பு கட்டி தான். இதற்கு முழுமையான தீர்வு என்பது கிடையாது. ஆனால் சுருங்க வைக்கலாம். அதனால் கொழுப்புக்கட்டி வந்துடுச்சேன்னு ரொம்ப பயம் வேண்டாம். மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி அதைக்கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



