100 ஆண்டுகள் வாழ மேதை சொன்ன சூப்பர் டிப்ஸ்கள்..அடடே இப்பவே கடைபிடிச்சிடுவோம்..!

நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும். கள்ளம்…

நமக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே போதும். மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே போதும் நிம்மதி வந்து விடும். நிம்மதி வந்துவிட்டால் அங்கு பணம் புரள ஆரம்பிக்கும். செல்வம் சேரும்.

கள்ளம் கபடமற்ற மகிழ்ச்சி குடி இருக்கும் இடத்தில்தான் லட்சுமி வாசம் செய்வாள். அதனால் புன்னகையுடன் நம் செயல்களைச் செய்வோம். கடமையைச் செய்ய பலனை எதிர்பாராத போது அது தானாகவே நம்மை வந்தடையும். அதில் தான் இருக்கு வாழ்க்கையின் சூட்சுமம்.

‘நூறாண்டுகாலம் வாழ்க… நோய் நொடியில்லாமல் வளர்க’ன்னு  சிவாஜியின் பழைய பாடல் ஒன்று உண்டு. அதுக்கு நாம என்ன செய்யணும்? எந்த முறையில் வாழ்ந்தா 100 ஆண்டுகள் நோய் இல்லாமல் வாழலாம்? வாங்க பார்க்கலாம். இதோ அந்;த அற்புத டிப்ஸ்கள்…

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அளவோடு சாப்பிட வேண்டும். நாக்குக்கு ருசியாக இருக்கிறதே என எதையும் அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.

மனசாட்சிக்கு விரோதமான செயலைச் செய்யக்கூடாது. தினமும் குறித்த நேரத்தில் தூங்கி விட வேண்டும். அதுதான் ஆயுளை நீடிக்க உதவும். சீக்கிரம் தூங்கி அதிகாலை விழிப்பதே ஆரோக்கியம். கடன் வாங்காமல் வருமானத்துக்குள் வாழ்க்கை நடத்துவது அவசியம். சம்பாதிக்கும்போதே சேமிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

நன்றி: பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் மேதை டாக்டர் விஸ்வேஸ்வரய்யா (103 வயது).