வில்லன்.. குணச்சித்திர நடிகர்… தயாரிப்பாளராகவும் சாதித்த சங்கிலி முருகன்..!!

Published:

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்த பிஎஸ் வீரப்பா பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார். எம்ஜிஆர், சிவாஜியை வைத்து அவர் தயாரித்த சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய உள்ளன. பிஎஸ் வீரப்பாவை அடுத்து தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் ஒருவர் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்தால் அவர் சங்கிலி முருகன் தான்.

மதுரை அருகே பொதும்பு என்ற சின்ன ஊரைச் சேர்ந்தவர் தான் சங்கிலி முருகன். அவரை திரையுலகில் உள்ளவர்கள் பொதும்பு முருகன் என்று தான் அழைப்பார்கள். முதலில் சங்கிலி முருகனை திரையுலகில் பிரபலம் ஆக்கியவர் பாக்யராஜ் தான்.

சங்கிலி முருகன் பொண்ணு ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்தது அவர் சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு ஜவுளிக்கடைக்காரராக நடித்திருப்பார்.

தனுஷின் 50வது படத்தின் வில்லன் வாய்ப்பை தவற விட்ட இசையமைப்பாளர் யாரு தெரியுமா?

ஆனால் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் உங்களுக்காக ஒரு அழகான கேரக்டர் வைத்திருக்கிறேன், அந்த படத்தில் நீங்கள் நடித்தால் மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்று பாக்யராஜ் கூறினார். ஆனால் இந்த படத்தில் நான் கிடைத்த வாய்ப்பை விட விரும்பவில்லை, எனவே இந்த படத்தில் நான் நடிப்பேன், உங்கள் படத்திலும் நடிப்பேன் என்று பிடிவாதமாக சங்கிலி முருகன் சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து தான் ஒரு கை ஓசை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரை சங்கிலி முருகனுக்கு கொடுத்தார் கே.பாக்யராஜ். இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பது மட்டுமின்றி சிலம்பு சண்டை காட்சிகளிலும் சூப்பராக நடித்திருப்பார். இந்த படத்திற்காகவே சிலம்பு சண்டை அவர் பயிற்சி செய்தார். மாதம் 20 ரூபாய் கொடுத்து மதுரையில் எம்ஜிஆருக்கு சிலம்பு சண்டை கற்றுக் கொடுத்தவரிடம் தான் அவர் சிலம்பு சண்டை பயிற்சி பெற்றதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

ஒரு கை ஓசை படத்தின் வெற்றியை அடுத்து சங்கிலி முருகனுக்கு ஏராளமான வில்லன் கேரக்டர் வந்தது. சட்டம் ஒரு இருட்டறை, விடியும் வரை காத்திரு, கடல் மீன்கள், சிவப்பு சூரியன் போன்ற பல படங்களில் அவர் வில்லனாக நடித்தார். வில்லனாக மட்டுமின்றி அவர் பல படங்களை வெற்றிகரமாக தயாரித்து உள்ளார்.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

விஜயகாந்த் நடிப்பில் ராமநாராயணன் இயக்கத்தில் உருவான கரிமேடு கருவாயன் என்ற திரைப்படத்தை தான் அவர் முதலில் தயாரித்தார். விஜயகாந்த், நளினி நடிப்பில் உருவான இந்த படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து அவர் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க தொடங்கினார். ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன் ஆகிய படங்களையும், கார்த்திக் நடித்த பாண்டி நாட்டு தங்கம், பெரிய வீட்டு பண்ணைக்காரன், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களை தயாரித்தார்.

விஜயகாந்த் நடித்த பெரிய மருது என்ற படத்தை அவர் தயாரித்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் விஜய், ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை என்ற படத்தை சங்கிலி முருகன் தான் தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் ராஜ்கிரண் நடித்த பாசமுள்ள பாண்டியரே படத்தை தயாரித்த சங்கிலி முருகன் விஜய் தமன்னா நடித்த சுறா என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தின் சில காட்சிகளை மாற்றும்படி இயக்குனர் எஸ்பி ராஜ்குமாரிடம் சங்கிலி முருகன் கூறியதாகவும் ஆனால் அவர் தனது பேச்சைக் கேட்கவில்லை என்றும் அதனால் இந்த படத்திற்கு செலவு பல மடங்கு ஆனதாகவும் அவர் பேட்டிகளில் கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

இந்த படத்தின் தோல்வி காரணமாக அவர் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு ஆறு வருடம் கழித்து மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தை தயாரித்தார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான இந்த படம் ஓரளவு வெற்றியை பெற்றது. நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பல்திறமை கொண்ட சங்கிலி முருகன் கடந்த ஆண்டு வெளியான வேலன் என்ற திரைப்படத்தில் கூட சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் உங்களுக்காக...