தனுஷின் 50வது படத்தின் வில்லன் வாய்ப்பை தவற விட்ட இசையமைப்பாளர் யாரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி இளம் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளில் கால் பதித்து வெற்றி கொடிகட்டி வருகிறார். சில தோல்வி படங்களுக்கு மத்தியில் தனுஷிற்கு கம்பேக் கொடுத்தப் படம் திருச்சிற்றம்பலம். ஒரு மாறுபட்ட காதல் படமாக இருந்தாலும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து தனுஷை மாஸ் ஹீரோவாக மாற்றியது.

அதன் பின் அவர் நடிப்பில் வெளியான நானே வருவேன், வாத்தி படங்களும் தனுஷிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக தனுஷ் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக் களத்தை மையமாக கொண்டு உள்ளது. இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.

இந்த நிலையில் தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடிகர் தனுஷின் 50வது படத்தை 100 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அதோடு தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, இந்த படத்தில் தனுஷின் ராசியான ஹீரோயினாக நித்தியா மேனன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கூட்டணியில் உருவான திருச்சிற்றம்பலம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நித்தியா மேனன் இரண்டாது முறையாக தனுஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷை நடிகராக பார்த்த நித்தியா மேனன், ராயன் படத்தில் ஒரு இயக்குனராக பார்த்து வியந்துள்ளார். படப்பிடிப்பு தளங்களில் பரபரப்பாகவும், முனைப்புடன் வேலை செய்யும் தனுஷை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் ராயன் படத்தில் இருந்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நடிக்க தேனிசை தென்றல் தேவாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

கஷ்டப்பட்டு பாடினேன்… இப்படியா சொதப்பி வைப்பீங்க…. என எஸ்.பி.பி கோவப்பட்ட ஒரே பாடல்!

இசையமைப்பாளர் தேவா அவர்கள் எல்லாவிதமான பாடல்களிலும் உச்சம் தொட்டவர். அதாவது துள்ளலான பாடலாக வந்தாலும் சரி, மெலடியான பாடலாக இருந்தாலும் சரி, குத்து பாட்டா இருந்தாலும் சரி, கானா பாட்டாக இருந்தாலும் தனது தனித்திறமையை காட்டிட கூடியவர். ஆனால் அவர் படங்களில் பெரியதாக நடித்ததில்லை.

deva

இந்நிலையில் தனுஷின் ராயன் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு முதலில் தேனிசை தென்றல் தேவாவிற்கு கிடைத்துள்ளது. நடிகர் தனுஷ் தேவாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராயன் படத்தில் வில்லனாக நடிக்க முடியுமா என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு தேவா நடிக்க சம்மதம் தான், ஆனால் என்னால் வசனங்களை மனப்பாடம் செய்ய முடியாது, மேலும் நடிப்பு எனக்கு புதிது தான் அதனால் பல டேக் போக வாய்ப்பு உள்ளது.

இதனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம், மேலும் இது படத்தின் பட்ஜெட்டை பாதிக்கும் என்பதால் என்னால் முடியாது என மறுத்துள்ளார். தனுஷின் ராயன் திரைப்படம் வட சென்னையை மையமாக வைத்து பழிவாங்கும் கதையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேவாவின் கானக்குரல் வில்லனாக இருந்தால் அது படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்திருக்கும்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...