எஸ்ஏ சந்திரசேகர் படத்தில் நடிக்க மறுத்த பிரபு-கார்த்திக்.. கைகொடுத்த விஜயகாந்த்.. சூப்பர்ஹிட்டாகிய சாட்சி..!!

Published:

எஸ்ஏ சந்திரசேகர் ஒரு பிரபலமான இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் அவரது படத்தில் நடிக்க பிரபு மற்றும் கார்த்திக் ஆகிய இருவருமே மறுத்துவிட்டனர். அப்போது கை கொடுத்தவர் தான் விஜயகாந்த்.

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கடந்த 1978 ஆம் ஆண்டு அவள் ஒரு பச்சை குழந்தை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் விஜயகாந்துடன் இணைந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டாவது படமே வெற்றிப் படம் என்பதால் விஜயகாந்த் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் இருவருமே மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து விஜயகாந்த் நடித்த நெஞ்சிலே துணிவிருந்தால் என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு நீதி பிழைத்தது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி, இதயம் பேசுகிறது போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தொடர் தோல்விதான் கிடைத்தது.

ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி! வில்லனாக களமிறங்கும் பிரபலங்கள்!

இந்த நிலையில் தான் சாட்சி என்ற திரைப்படத்தை இயக்க அவர் முடிவு செய்தார். இந்த படத்தில் நடிக்க பிரபுவை அவர் அணுகியபோது, தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்ததால் பிரபு, எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு கார்த்திக்கை சென்று சந்தித்தபோது அவரும் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தான் தனக்கு வெற்றிப்படம் கொடுத்த விஜயகாந்த்தை எஸ்ஏ சந்திரசேகர் சந்தித்தார். எஸ்ஏ சந்திரசேகர் போலவே விஜயகாந்த்தும் தொடர் தோல்வியை சந்தித்து கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு பிறகு சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், ஆட்டோ ராஜா,  ஓம் சக்தி, சட்டம் சிரிக்கிறது போன்ற தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்ததால் அவர் திரை உலகை விட்டு வெளியேற்றப்பட வேண்டிய நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் தான் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் விஜயகாந்த் இருவரும் இணைந்த திரைப்படமாக சாட்சி அமைந்தது. இந்த படம் கடந்த 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. விஜயகாந்த் ஜோடியாக விஜி நடித்த இந்த படத்தில் நம்பியார், பண்டரிபாய், செந்தில், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்தனர்.

சிமெண்ட் கம்பெனி ஓனருடன் திருமணம்.. அஜித் பட தயாரிப்பாளர்.. யார் இந்த நடிகை..!

இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா தயாரித்திருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு நல்ல லாபம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவருக்குமே சாட்சி ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதன் பிறகு இருவருமே தமிழ் திரையுலகில் பிசியானார்கள்.

இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். அவர் ஒரு கொலைகாரனை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவார். ஆனால் தகுந்த சாட்சி இல்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். இதனை அடுத்து போலீஸ் டிரசை கழட்டி எறிந்து விட்டு தனியாகவே அந்த கொலைகாரனையும், அவனுடைய கூட்டத்தினர்களையும் விதவிதமான முறையில் சாட்சியே இல்லாமல் தண்டிப்பார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

கங்கை அமரன் இயக்கிய முதல் படம்.. பிரபுவின் அசத்தல் நடிப்பில் “கோழி கூவுது” கதை..!!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக சண்டை காட்சிகளில் விஜயகாந்த் அசத்தி இருந்தார். இந்த படத்தில் சங்கர் கணேஷ் இசையில் உருவான நான்கு பாடல்கள் ஹிட்டானது. மொத்தத்தில் விஜயகாந்த் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்குமே ஒரு ரிஎண்ட்ரி படமாக சாட்சி படம் அமைந்தது.

மேலும் உங்களுக்காக...