குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

கடந்த 80களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் சம்பாதித்த ஹாஜா ஷரிப் இப்போது சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வறுமை காரணமாக கூலி வேலை செய்வதாக கூறப்படுகிறது.

நடிகர் ஹாஜா ஷெரிப் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீழக்கரை என்ற பகுதியில் பிறந்தார். அவர் தனது குடும்பத்துடன் இருந்து கீழக்கரையில் பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான் திடீரென அவரது தாயார் மறைந்தார். இதனை அடுத்து அவரது தந்தை தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் பள்ளி படிப்பை தொடந்த ஹாஜா ஷரிப் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

ஜெயம் ரவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

haja sheriff

இந்த நிலையில் தான் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் பாக்யராஜ் ஜோடியாக நடித்த ரதியின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிப்பூக்கள், பாக்யராஜ் நடித்த சுவரில்லா சித்திரங்கள், ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இருப்பினும் ஹாஜா ஷெரிப்பின் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய திறப்பு திரைப்படம் என்றால் அது அந்த ஏழு நாட்கள் திரைப்படம் தான். இசையமைப்பாளராக பாக்யராஜ் நடிக்க, அவருக்கு உதவியாளராக ஹாஜா ஷெரிப் நடித்திருப்பார். ஆசானே.. ஆசானே… என்று அவர் செய்யும் காமெடிகள் கலக்கலாக இருக்கும். அதேபோல் அம்பிகாவுக்கும் ஹாஜா ஷெரிப்புக்கும் உள்ள காமெடி காட்சிகளும் சிறப்பாக இருக்கும்.

என்றும் மனதை விட்டு நீங்காத 90களின் குழந்தை பருவத்தை நினைவூட்டும் சீரியல் பாடல்கள் ஒரு பார்வை!

இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஹாஜா ஷெரிப்புக்கு வாய்ப்புகள் குவிந்தது. அவருக்கு ஆயிரக்கணக்கிலும் லட்ச கணக்கிலும் சம்பளம் கொடுத்து தயாரிப்பாளர்கள் வாய்ப்புகள் கொடுத்தனர். இதனால் சென்னை வடபழனியில் சொந்த வீட்டை வாங்கிய ஹாஜா ஷெரிப் திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

haja sheriff1

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனை அடுத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தும் தொழிலை செய்தார். சினிமா நட்சத்திர கலைஞர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றார். அதில் ஓரளவு வருமானம் வந்து கொண்டிருந்த நிலையில்தான் இந்த நிகழ்ச்சிகளை பெரிய பெரிய நிறுவனங்கள் நடத்த தொடங்கியதால் அதிலும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது.

சினிமாவிலும் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வறுமை காரணமாக அவர் தான் ஆசை ஆசையாய் கட்டிய வடபழனி வீட்டை விற்றுவிட்டு அதன் பின் சென்னை பிராட்வே பகுதியில் வாடகை வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் மண்ணடி பகுதியில் ஒரு நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து, ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் சம்பாதித்த ஹாஜா ஷரீப், தற்போது வறுமையில் இருக்கும் நிலையில், அவருக்கு மீண்டும் திரையுலகில் வாய்ப்புகள் கொடுத்து, அவருடைய வாழ்க்கை நிலையை உயர்த்த திரையுலகினர் முன்வர வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...