விஜய் சேதுபதியின் பரீட்சார்த்த முயற்சிக்கு அவரா காரணம்? பலமா தடம் போட்டுருக்காரே!

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா மெகா ஹிட் ஆனது. அதன்பிறகு அவர் நடித்த படம்தான் சமீபத்தில் திரைக்கு வந்த ஏஸ். இந்தப் படத்தைக் கழுவி கழுவி ஊத்துறாங்க. ஆனாலும் மனிதர் சளைக்கமாட்டார். அடுத்து ஒரு…

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா மெகா ஹிட் ஆனது. அதன்பிறகு அவர் நடித்த படம்தான் சமீபத்தில் திரைக்கு வந்த ஏஸ். இந்தப் படத்தைக் கழுவி கழுவி ஊத்துறாங்க. ஆனாலும் மனிதர் சளைக்கமாட்டார். அடுத்து ஒரு ஹிட் கொடுப்பார். இவர் பல படங்களில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கெல்லாம் யாரு காரணமா இருக்கும்? வாங்க பார்க்கலாம்.

கமல் வந்து இமேஜைக் கலைச்சிப் போட்டு நடிக்கிறவரு. விஜய்சேதுபதி நிறைய பரிசோதனை முயற்சிக்கான கேரக்டர்கள்ல நடிச்சாரு. சூப்பர் டீலக்ஸ்ல திருநங்கையா நடிச்சாரு. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்துல காட்டுவாசியா நடிச்சாரு. இதெல்லாம் என்ன தைரியத்துல நடிக்கிறாரு.

கமல்ஹாசன் நமக்கு முன்னாடியே ஒரு பாதை போட்டுக் கொடுத்துருக்காரு. இந்தப் பாதை ஊரு போய்ச் சேருமா சேராதாங்கறதுக்கு முன்னாடியே ஒருத்தர் நமக்கு முன்னாலயே நடந்து போயிருக்காரு. பாதங்கள் பட்டுப் பட்டுப் பாதை உருவானது. அதனால இவருடைய பாதைதான் அதற்குக் காரணம்.

அதே மாதிரி ரஜினி, கமல் இருவரின் பாதைகளும் வேறு வேறு. ஆனா ரசிகர்களுக்குள்ள அப்படி ஒரு விஷயத்தை உருவாக்குவது கமர்ஷியலா வசூலை அள்ள தயாரிப்பாளர்கள் செய்ற தந்திரம். அது ரியல் கிடையாது. ஏன்னா கமலுக்கு ரஜினிகாந்த் ரசிகர். இருவரும் வேறு வேறு தன்மை கிடையாது. ஒரு ரோஜாப்பூவை இன்னொரு ரோஜாப்பூவோடு ஒப்பிடாதேன்னு சொல்வாங்க.

ஒவ்வொரு ரோஜாப்பூவுக்கும் தனித்தன்மை உண்டு. ரெண்டும் பார்க்கறதுக்கு ஒரே மாதிரி இருக்கும். அதனால ரெண்டுக்கும் தனித்தன்மை இருக்கு. எல்லாருடைய உள்ளங்கையும் ஒண்ணா? ஒரே ரேகையா ஓடுது? எல்லாக் கலைஞர்களுக்கும் தனித்தன்மை இருக்கு. ஒட்டுமொத்தமா பார்க்கும்போது ஒரே மாதிரி இருக்குமே தவிர அது உண்மை கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி பாதைகள் இருக்கு. ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.