மனைவி அமைவதெல்லாம்.. பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளாரென அறைந்த மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!

  சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோனின் கன்னத்தில் அவரது மனைவி ப்ரிஜிட்டே பளாரென அறையும் காட்சி உள்ளது. தென்கிழக்காசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக…

french pm

 

சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோனின் கன்னத்தில் அவரது மனைவி ப்ரிஜிட்டே பளாரென அறையும் காட்சி உள்ளது. தென்கிழக்காசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வியட்நாம் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றது.

வீடியோவை கவனிக்கும்போது, அவர் தள்ளியது போல் இருப்பதாக சிலர் கூறினாலும், கன்னத்டில் பளாரென அறைந்தது போல தெரிகிறது என பலர் கூறி வருகின்றனர். இந்த நிகழ்வு, இருவரும் விமானத்தின் உள்ளே இருக்கும் போது நிகழ்ந்ததாகவும், மாக்ரோன் கதவொன்றின் அருகில் நின்றபோது அவரது மனைவியின் கை அறையும் காட்சி மட்டும் தெரிவது போல் உள்ளது. கன்னத்தில் அறை வாங்கிய மாக்ரோன் அதற்கு பதிலளிக்காமல் அமைதியாக இருப்பதையும் காணலாம்.

முற்றிலும் திடுக்கிட்ட மாக்ரோன் சில வினாடிகளில் தன்னை கட்டுப்படுத்தி, வெளியே உள்ளவர்களிடம் கை அசைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

விமானத்திலிருந்து இறங்கும் போது, மாக்ரோன் தனது மனைவியிடம் கை நீட்டுகிறார், ஆனால் ப்ரிஜிட்டே அதை ஏற்காமல் விமானத்தில் இருந்து இறங்கி வருகிறார்.

இந்த வீடியோ சர்ச்சையானது இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மாக்ரோன், “நான் என் மனைவியுடன் விளையாட்டாக சில விஷயங்களை செய்வேன். அதை வைத்து சர்ச்சையாக பேசி விடுகிறார்கள், நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை’ என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபரின் மாளிகை முதலில் இந்த சம்பவத்தை முற்றிலும் மறுத்தது. பின்னர் இருவரும் வெறும் வாக்குவாதத்தில் மட்டுமே இருந்தார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது

https://x.com/WarlordDilley/status/1926986799395549377.