ஒழுங்கா இந்தியாவுடன் ஒத்துப்போங்க.. இல்லாட்டி ராஜினாமா செஞ்சிட்டு போங்க.. வங்கதேச அதிபரை மிரட்டும் தொழிலதிபர்கள்?

  வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்களின்படி அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நிலவும் மின்சாரம் மற்றும் எரிவாயு…

india bangaladesh

 

வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்களின்படி அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நிலவும் மின்சாரம் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக, வங்கதேசத்தின் தொழில்துறைகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பலர் தற்போது நிலவும் சூழலை 1971ஆம் ஆண்டு விடுதலை போருக்கு ஒப்பிட்டுள்ளனர்.

“அப்போது அறிவாளிகள் இலக்காக இருந்தார்கள்; இப்போது தொழிலதிபர்கள்தான் குறியாக்கப்படுகிறார்கள். எரிவாயுக் கட்டணங்களை செலுத்துகிறோம், ஆனால் விநியோகம் கிடையாது. தொழில்கள் இயங்கவில்லை, இருந்தும் கடன் திருப்பிச் செலுத்துமாறு அழுத்தம், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் அரசு மிரட்டல்கள் இருக்கின்றன. நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்,” என வங்கதேச டெக்ஸ்டைல் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் ஷவ்கத் அஜீஸ் ரசல் தெரிவித்துள்ளார்.

மேலும், “தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, அரசு உதவி இல்லை, ஊதியம் கூட செலுத்த இயலவில்லை. இருந்தும், எங்களை குறி வைக்கின்றனர். வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருக்கின்றன,” என பிசிஐ தலைவர் அன்வார்-உல்-ஆலம் சவுத்ரி பர்வேஸ் கூறியுள்ளார்.

“இந்த நிலை தொடருமானால், இன்னும் ஒருசில மாதங்களில் பாதி தொழில்கள் மூடப்படும்,” என துணைத் தலைவர் சாலௌத் சமான் கூறியுள்ளார்.

இந்நிலையில், இடைக்கால அரசை வழிநடத்தி வரும் முகமது யூனுஸ், நாட்டின் மோசமான நிர்வாக நிலைக்கு “வெளிநாட்டு சதி” என” காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள முன்னணி தொழில் அதிபர்கள் அண்டை நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடன் இணக்கமான உறவை பேண வேண்டும் என்றும் இந்தியாவை பகைத்து கொண்டு வங்கதேசத்தில் தொழில் செய்ய முடியாது என்றும் தேவை இல்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து வங்கதேசத்தின் எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு விலகுங்கள், அடுத்து வரும் ஆட்சி இந்தியாவுடன் இணக்கமாக இருக்கும் என்று தற்போதைய அதிபருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.