ரக்ஷாபந்தன் உருவனத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலாறு என்னவென்று தெரியுமா…?

By Meena

Published:

அண்ணன் தங்கை சகோதரத்துவத்தை முக்கிய படுத்தும் சிறப்பான நிகழ்வு தான் ரக்ஷாபந்தன் விழாவாகும். இந்த ரக்ஷாபந்தன் ஆவணி மாதம் வரக்கூடிய முதல் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக யாரை கருதுகிறார்களோ அவர்களது மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டி கொண்டாடுவர்.

அப்படி ஒரு பெண் கையில் கயிறு கட்டுவதை ஒரு ஆண் ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்த சகோதரியின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறுவார். ராக்கி கட்டியவுடன் சகோதரர் சகோதரிக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் நடக்கும். வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த ரக்ஷாபந்தன் தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி கொண்டு வருகிறது. இந்த ரக்ஷாபந்தன் பிறந்ததற்கு பின்னாடி இருக்கும் சுவாரஸ்யமான வரலாறு பற்றி இனி காண்போம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தில் வடிந்த ரத்தத்தை தடுப்பதற்காக தனது சேலையில் ஒரு பகுதியை கிழித்து அவரின் மணிக்கட்டில் கட்டினார். இதனால் மனமகிழ்ந்த கிருஷ்ணர் திரௌபதியை ஆசீர்வதித்து அவரை இன்னல்களில் இருந்து காப்பாற்றுவதாக உறுதியளித்தார். அதன்படி கௌரவர்கள் திரௌபதியின் சேலையை தோலுரித்த போது கிருஷ்ணர் வந்து காப்பாற்றினார். அப்படி நடந்த நிகழ்வே ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது என்று கூறுவர்.

மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க கதையும் ரக்ஷாபந்தனுக்கு கூறப்படுகிறது. அது என்னவென்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர்ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப்பட்ட ராணி தனக்காக போர்க்களத்திற்கு செல்லவிருக்கும் பேரரசர் ஹுமாயூன் அவர்களுக்கு ராக்கி என்னும் புனித கயிற்றை அனுப்பி போருக்கு செல்வதற்கு முன் கட்டிக் கொள்ளுமாறு அனுப்பி வைத்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஹுமாயூன் பாச உணர்ச்சி கொண்ட ராணியை காப்பாற்றுவதற்கு அந்த கயிற்றை கட்டிக் கொண்டு போர்க்களத்துக்கு சென்றார். இந்த நிகழ்வே ரக்ஷாபந்தனாக கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர்.

இப்படியே ரக்ஷா பந்தன் பின்னால் பல கதைகள் கூறுவதுண்டு. ரக்ஷா பந்தன் அண்ணன் தங்கை பாசத்தை வெளிகாட்டுவதற்கும் கொண்டாடப்படும் இந்து பண்டிகை என்று கூறப்படுவதை விட சமுதாய பண்டிகையாகவே இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.