உலகத்தில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு ஆனாலும் சரி, கல்வி தொழில்நுட்பம் எதுவாக இருந்தாலும் முன்னோடியாக செல்லக்கூடியது ஜப்பான். அதே ஜப்பான் நாட்டில் பல அதிசயமான சம்பவங்களும் வினோதமான நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது ஜப்பானில் நடந்திருக்கிறது.
ஜப்பான் நாட்டில் தற்போது அதிக அளவு வயது முதிர்ந்தோர்கள் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வு முடிவின்படி ஜப்பானில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 36.25 மில்லியனாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பெண்கள் 20.53 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். ஆண்கள் 15.72 மில்லியன் இருக்கிறார்கள். ஜப்பானின் மொத்த மக்கள் தொகையை பார்க்கும் பொழுது முதியோர்கள் மட்டும் 29.3% இருக்கிறார்கள்.
அதனால் இவர்களை கவனித்துக் கொள்வதற்கு தான் அங்கு ஆட்கள் இல்லை. இவர்கள் பெற்ற பிள்ளைகளும் சரியாக கவனித்துக் கொள்வதில்லை. அதனால் ஜப்பான் நாட்டைச் சார்ந்த வயது முதிர்ந்த மூதாட்டிகள் வேண்டுமென்றே சிறிய குற்றங்களை செய்து சிறைக்கு சென்று விடுகிறார்கள். ஜப்பான் டோக்கியோக்கு வடக்கே பெண்களுக்கு என பிரத்யேகமான ஜெயில் இருக்கிறது. இங்கு 500 கைதிகள் வரை இருக்கின்றார்கள்.
இந்த கைதிகளிடம் சென்று நேர்காணல் நடத்திய போது அங்கிருந்த மூதாட்டிகள் நாங்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறோம். எங்களது பிள்ளைகளும் கவனித்துக் கொள்வதில்லை. அதனால்தான் இங்கு குற்றம் செய்துவிட்டு ஜெயிலுக்கு வந்து விடுகிறோம். இங்கு அதிகாரிகள் எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் என்று அவர்கள் பேசியது கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.