விடாமுயற்சி படத்தினால் Good Bad Ugly படத்துக்கு வந்த சிக்கல்… இதை எதிர்பார்க்கவே இல்லையே…

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்குமாரின் படம் வெளியாகிறது…

gbu

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனென்றால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித்குமாரின் படம் வெளியாகிறது என்பதால் ஆரவாரத்துடன் முதல் நாளில் இப்படத்தை வரவேற்த்தனர். மேலும் ஓரளவு நல்ல விமர்சனங்களையும் இப்படத்திற்கு ரசிகர்கள் கூறினார்கள்.

ஆனால் போகப் போக விடாமுயற்சி படத்திற்கு தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்று கூறுகின்றனர். Overseas- யிலும் முதல் ஷோவுக்கு மட்டுமே கூட்டம் இருந்தது. அதற்கு அடுத்தடுத்த ஷோக்களில் ஆளே இல்லை என்றும் தகவல் வந்தது. முதல் நாள் வசூல் ஆனது தமிழ்நாட்டில் வரும் 22 கோடி மட்டுமே விடாமுயற்சி வசூலித்து இருந்தது. இது யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தாலும் இந்த ஒரு விஷயம் என்று வந்துவிட்டால் பிரச்சனை தான்.

ஏனென்றால் ஹீரோகளின் ஒவ்வொரு முந்தைய படத்தின் வியாபாரம் எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் அதற்கு அடுத்ததாக வெளியாகும் படத்தின் ஆன்லைன் சேட்டிலைட் ரைட்ஸ் போன்றவை தீர்மானிக்கப்படும். அதனால் ஏப்ரல் பத்தாம் தேதி அஜித் நடித்த GoodBadUgly வெளியாக இருக்கிறது. தற்போது விடாமுயற்சி எவ்வளவு வசூலித்து இருக்கிறது என்ற அடிப்படையில் தான் GoodBadUgly படத்தின் வியாபாரம் இருக்கும்.

தற்போது விடாமுயற்சி இறங்குமுகத்தை கொண்டு இருப்பதால் GoodBadUgly படத்தின் வியாபாரம் சொல்லும் அளவிற்கு பெரிதாக இருக்காது இன்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர். இதனால் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் ஆதிக் ரவிச்சந்திரமும் சிறிது அப்சட்டில் இருக்கிறார்களாம். இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.