சபரிமலை செல்லும் பக்தர்கள் பயபக்தியுடன் தீவிரமாக விரதம் இருப்பதைப் பார்த்திருப்போம். இது நமக்கு என்னென்ன பலன்களைத் தருதுன்னு லிஸ்ட் போட்டால் போய்க்கிட்டே இருக்கும். இந்த ஒரு பதிவில் சொல்ல முடியாது. சுருக்கமா சொல்லணும்னா நல்லவனாகவும், வல்லவனாகவும் மாறலாம்.
இதனால பலருக்கும் வாழ்க்கையே மாறியுள்ளது. அதனால்தான் ஆண்டுதோறும் கூட்டம் கூடுது. அது சரி. கன்னிபூஜை அவசியமா? அதுக்கு பொருளாதார வசதி இல்லாத பக்தர்கள் என்ன செய்வாங்கன்னு கேள்வி எழலாம். வாங்க பார்க்கலாம்.
சபரிமலை ஐயப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தேடி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.
சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது தான் மரபு. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற ஐயப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள். கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே ஐயப்பன் விரும்புகிறார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அவள் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில் அழுதை நதியில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
சபரிமலை சென்று வந்தவர்கள், ஐயப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.