எனது மனைவியை புரோக்கர் மூலம் சந்திக்க முயற்சி.. ஆசிம் முநிர் மீது இம்ரான்கான் திடுக்கிடும் புகார்..!

  பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தலைவராக இருக்கும் ஆசிம் முநிர் எனது மனைவியை இடைத்தரகர் மூலம் சந்திக்க நினைத்தார் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை சிறையில் இருக்கும் இம்ரான் கான் சுமத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

imrankhan

 

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தலைவராக இருக்கும் ஆசிம் முநிர் எனது மனைவியை இடைத்தரகர் மூலம் சந்திக்க நினைத்தார் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை சிறையில் இருக்கும் இம்ரான் கான் சுமத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ள நிலையில், அவரது மனைவி புஸ்ரா பிபியும் சிறையில் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் ஜெனரல் ஆசிம் முநிர் மீது, இம்ரான் கான் திடுக்கிடும் புகாரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“நான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, ஜெனரல் ஆசிம் முனிரை ஐஎஸ்‌ஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கினேன். அப்போது அவர், எனது மனைவி புஷ்ரா பீபியை ஒரு இடைத்தரகர் மூலம் முநிர் சந்திக்க முயற்சித்தார். ஆனால், புஷ்ரா அரசியல் விஷயங்களில் ஈடுபட மாட்டேன் என்றும், எதுவாக இருந்தாலும் என் கணவரிடம் பேசுங்கள் என்றும், உங்களை சந்திக்க விருப்பமில்லை என்றும் மறுத்துவிட்டார்.

அதனால்தான், இப்போது ஜெனரல் ஆசிம் முநிர் பழிவாங்கும் எண்ணத்தால், என் மனைவியையும் சிறையில் அடைத்திருக்கிறார். ஒரு தாயாக இருக்கும் என் மனைவி, சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குக் காரணம் ஒரே ஒருவர், ஆசிம் முநிர்” என்று இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

“என் மனைவியை கூட சந்திக்க எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜூன் 1 ஆம் தேதி சந்திக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், அந்த சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாகிஸ்தானின் கடந்த இருண்ட காலங்களிலும் கூட இத்தகைய மோசமான செயல் நடந்ததில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி புஷ்ரா பீபி, அரசியலில் எந்தவிதமான பங்கும் இல்லாமல், ஒரு குடும்ப பெண்ணாக இருந்த நிலையில், தொடர்பில்லாத வழக்கில் சிக்க வைத்து, எந்த ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டு, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.