உங்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்? பலன்கள் இதோ!

Krodhi Tamil Puthandu Palangal 2024: தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை 1 தமிழ் வருட பிறப்பாக கருதப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. தமிழ் வருடப்பிறப்பின்படி முதல் மாதமான சித்திரையில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்வார்.

இவ்வாறு பன்னிரண்டு ராசிக்கும் 12 மாதங்களில் சூரியன் இடம் பெயர்வார். அவ்வகையில் இந்த வருடம் மேஷம் ராசியில் சூரியன் – குரு, மிதுனம் ராசியில் சந்திரன், கன்னி ராசியில் கேது, கும்பம் ராசியில் சனி – செவ்வாய் மீனம் ராசியில் ராகு – புதன் – சுக்கிரன் என கிரக நிலைகள் அமைந்துள்ளது.

குரோதி வருடம்

பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டு குரோதி வருடம் என்று கூறப்படுகிறது. தமிழ் பஞ்சாங்கத்தின் படி 60 வருடங்கள் உள்ளது இதில் 38வது வருடம் தான் குரோதி வருடம். குரோதம் என்றால் கோபம் பகை கேடு எனக் கூறப்படும்.

அதேபோன்றுதான் இந்த குரோதி வருடமும் அதிக பகை வளரும், போர் ஏற்படும், விலைவாசி உயரும், இழப்பு ஏற்படும், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அதற்கேற்றார் போல் பகை கிரகங்களான செவ்வாயும் சனியும் ஒரே இடத்தில் சஞ்சரிக்கின்றனர். எனவே இந்த வருடம் அனைவரும் ஆன்மீக ஈடுபாடுடன் கவனமாக இருக்க வேண்டும்.

கிரக நிலைகளின் படி 12 ராசிகளுக்கான இந்த வருட பலன்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: இதை மட்டும் தவிர்த்திடுங்கள்!

ரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: குவியப் போகும் பணம்!

மிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சுப செலவுகள் அதிகரிக்கும்!

கடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: இவர்களிடம் கவனமா இருங்க!

சிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: பேச்சில் மட்டும் கவனமா இருங்க!

கன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்: நிம்மதிப் பெருமூச்சு விடும் காலம்!

துலாம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பு..!!

விருச்சிகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ஆழ்மன எண்ணங்கள் நிறைவேறும்!

தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்: பொறுத்தால் சொத்து உங்களுக்கு!

மகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: குருவால் கொட்டும் பணமழை!

கும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க..!

மீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: நல்ல மாற்றங்கள் உண்டு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews