மிதுனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சுப செலவுகள் அதிகரிக்கும்!

Midhunam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் மிதுனம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

ஆனால் மிதுன ராசியினருக்கு பல நன்மைகளும் இந்த வருடம் நடக்க இருக்கிறது. 4ல் கேது 9ல் சனி, செவ்வாய் 10ல் ராகு சுக்கிரன் புதன் 11ல் சூரியன் குரு என கிரக நிலைகள் அமைந்துள்ளது. இரண்டாம் இடத்தின் அதிபதியான சந்திரன் ராசியில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும்.

அதே போன்று சூரியன் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். இதனால் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைப்பதோடு பணவரவு அதிகரிக்கும். ஒன்பதாம் இடத்தில் இருக்கும் சனி நல்ல நிலையில் இருக்கிறார் அவர் உழைப்புக்கேற்ற பலனை கொடுப்பார்.

அதனால் கூடுதல் உழைப்பு மூலமாக நல்ல பலன் கிடைக்கும். அதேநேரம் நான்கில் இருக்கும் கேது சில சிக்கல்களையும் உருவாக்குவார். 10ல் ராகு இருப்பதால் வீடு வாங்கும் போதும் வாகனம் வாங்கும் போதும் கேது சிக்கல்களை ஏற்படுத்த முயற்சிப்பார். அதனால் கவனமுடன் இருப்பது நல்லது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

ராசியில் சுக்கிரன் உச்சம் அடைவதால் இந்த வருடம் சொத்து தகராறு, வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 12ல் குரு இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் அது சுப செலவுகளாக அமையும்.

ஆறாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 9ஆம் இடத்தில் சனியுடன் சேர்ந்து இருப்பதால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது அதைப் போன்று பல பிரச்சனைகளை தவிர்க்க அனைவரிடமும் தன்மையாக பேசுவது நல்லது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

கூடுதல் பலன்களைப் பெற மன்னார்குடி ராஜகோபாலசுவாமியை தரிசிப்பது நல்லது. இல்லையேல் அருகாமையில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews