சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. சொத்து வாங்கி சேர்ப்பீர்கள்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்ம ராசிக்கு ஐந்து மற்றும் எட்டாம் இடத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு. இதனால் சிம்ம ராசி அன்பர்கள் ஆளுமை கொண்டவர்களாகவும் உயரிய குணங்கள் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். அதேபோன்று தன்னைச் சார்ந்தவர்களை எந்த நேரத்திலும் கைவிட மாட்டார்கள்.

இவ்வளவு காலம் சிம்ம ராசிக்கு 9ஆம் இடத்தில் குரு இருந்தார். இதனால் உத்தியோகத்தில் பதவி உயர்வு, வெளிநாட்டு பயணம், நற்பெயர், குலதெய்வ வழிபாடுகளை செய்து முடிப்பது போன்ற நல்ல விஷயங்கள் நடந்திருக்கும்.

இந்நிலையில் மே ஒன்றாம் தேதி குரு பகவான் பெயர்ச்சியாகி 10-ஆம் இடத்திற்கு செல்கிறார். எட்டாம் இடத்திற்கு அதிபதியான குரு பத்தாம் இடத்திற்கு வருவதால் தொழிலில் நஷ்டங்கள் காரியங்களில் தடை தாமதங்கள் போன்றவை ஏற்படலாம்.

எனவே எந்த ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். தொழிலதிபர்கள் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோன்று ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக இருக்கும் குரு பத்தாம் இடத்திற்கு வருவதால் குழந்தைகளுக்கு நல்லது நடக்கும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். முன்பை விட அதிக விருப்பத்துடன் படிப்பார்கள். எந்த ஒரு போட்டியிலும் சிம்ம ராசி அன்பர்களின் குழந்தைகளுக்கு வெற்றி மேல் வெற்றி குவியும்.

குரு பகவான் எத்தகைய பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்ல பலனை தான் கொடுக்கும். அவ்வகையில் சிம்ம ராசியில் இருக்கும் குரு நான்காம் இடத்தை பார்ப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

அடுத்ததாக குருவின் பார்வை இரண்டாம் இடத்தில் விழும்போது தன வரவுகள் ஏற்படும். தடைப்பட்ட காரியங்களும் நடந்து முடியும். சுப செலவுகள் ஏற்படும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உயரும்.

மேலும் கூடுதல் பலன்களைப் பெற புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்தும் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்வது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews