மகரம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: குருவால் கொட்டும் பணமழை!

Magaram Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் மகரம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

மகரம் ராசி அதிபதியான சனீஸ்வரன் இரண்டாம் இடத்தில் செவ்வாயுடன் சேர்ந்தும் மூன்றில் ராகு புதன் சுக்கிரன், நான்கில் சூரியன், ஆறில் சந்திரன், ஒன்பதில் கேது என கிரக நிலைகள் இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமைகிறது.

பொதுவாக மகரம் ராசியினருக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். இதில் இரண்டாம் இடத்தில் சனிஸ்வரனும் செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் என்ன பேசினாலும் பகையாவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதனால் யாரிடம் பேசும் போதும் கவனமாக பேச வேண்டும். அதேபோன்று இரண்டில் சனீஸ்வரன் இருப்பதால் எதிர்மறையாக நீங்கள் ஏதேனும் கோபத்தில் சொன்னால் கூட அது நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் எப்போதும் நேர்மறையாக பேசுவது சிறப்பு.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மூன்றில் ராகு இருப்பதால் பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோன்று நான்கிலிருந்து குரு 15 நாட்களிலேயே ஐந்தாம் இடத்திற்கு செல்கிறார். 5ல் அவர் இருப்பதால் அதிகப்படியான பண வரவு இருக்கும்.

இதனால் மகரம் ராசியினருக்கு பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குருவால் இந்த வருடம் பல நன்மைகள் நடக்கும். அதனால் அவ்வபோது ஆலயங்களுக்கு சென்று குரு பகவானை வழிபடுவது நல்லது. வருடத்தின் தொடக்கத்தில் ஆறில் சந்திரன் இருப்பதால் தாயாரின் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் உயர் கல்வி சிறப்பாக அமையும். மேலும் நற்பலன்களைப் பெற திருநள்ளாறு சென்று வருவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews