கன்னி தமிழ் புத்தாண்டு பலன்கள்: நிம்மதிப் பெருமூச்சு விடும் காலம்!

Kanni Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் கன்னி ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது

கன்னி ராசி அன்பர்கள் பொதுவாகவே புதனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடியவர்கள். எதையும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள். இதில் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே ராசி அதிபதியான புதன் 7ல் சென்று அமர்கிறார்.

இரண்டாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரனும் புதனுடன் சென்று அமர்ந்து விடுகிறார். இதனால் எதிர் பாலினத்தவர்களால் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த வருட தொடக்கத்தின் கிரக நிலைகள் ஜென்மத்தில் கேது 6ல் சனி, செவ்வாய் 7ல் ராகு, புதன், சுக்கிரன் 8ல் சூரியன், குரு 10ல் சந்திரன். இந்த கிரக நிலைகளின் படி 7ல் இருக்கும் ராகு சில சண்டை சச்சரவுகளை கொடுப்பார். ஆனால் ராசி அதிபதியான புதன் ராகுவுடன் இருப்பதால் சண்டையை பெரிய அளவில் போக விடாமல் பார்த்துக் கொள்வார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பொதுவாகவே கன்னி ராசியினர் யார் என்ன கூறினாலும் அதை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். இதில் எட்டில் குரு இருப்பதால் தங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ அடுத்தவர்கள் சொல்வதை மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த குரு ஒன்பதுக்கு மாறிய பின் கன்னி ராசி அன்பர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

6ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் முயற்சி செய்தால் நல்ல வேலை கிடைக்கக்கூடும். சிலருக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கேதுவால் தாயாரின் உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அதேபோன்று மாணவர்களுக்கு குரு 8லிருந்து 9க்கு மாறுவதால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பல வெற்றிகள் கிடைக்கும். ஆக கன்னி ராசி அன்பர்களுக்கு ராகு கேதுவால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குருவும் சனியும் நல்ல பலன்களை இந்த வருடம் கொடுப்பார்கள்.

மேலும் நல்ல பலன்களைப் பெற மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews