துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. இனி எதிலும் வெற்றி தான்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு மூன்று மற்றும் ஆறாம் இடத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான். எப்போதும் வளர்ச்சியை பற்றி யோசிப்பதிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் ஆர்வமாக இருப்பவர்கள் துலாம் ராசி அன்பர்கள்.

இவ்வளவு காலம் குரு பகவான் துலாம் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்தார். இதனால் சுப செலவுகள் ஏற்பட்டிருக்கும். லாபம் அதிகரித்திருக்கும். திருமணங்களும் கைகூடி இருக்கும். இந்நிலையில் ஏழாம் இடத்தில் இருந்து குரு பெயர்ச்சி ஆகி எட்டாம் இடத்திற்கு செல்கிறார்.

மூன்றாம் இடத்திற்கு அதிபதியான குரு அஷ்டமஸ்தானமான எட்டாம் இடத்திற்கு செல்வதால் திருமணம் முடிந்து பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்றிணைவார்கள். புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

அதேபோன்று ஆறாம் இடத்திற்கு அதிபதியான குரு எட்டாம் இடத்திற்கு செல்வதால் உங்களுக்கு எதிராக நின்றவர்கள் விலகிச் செல்வார்கள். வீடு மற்றும் வாகனத்திற்காக வாங்கிய கடன் நிவர்த்தியாகும். வாடகை கொடுக்கும் சுமையும் குறையும்.

குரு தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும். அவ்வகையில் குரு இரண்டாம் இடத்தை பார்க்கிறார். தன வரவு அதிகரிக்கும், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும்.

இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். அதேபோன்று ஐந்தாம் பார்வையாக 12-ஆம் இடத்தை பார்க்கும் போது செலவுகள் குறையும்.

பொருள் நஷ்டங்கள் மாறும் அதோடு குரு ஒன்பதாம் பார்வையாக நான்காம் இடத்தை பார்க்கும் போது சொந்த வீடு வாங்கும் யோகம் உருவாகும். உறவினர்களிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மேலும் கூடுதல் பலன்களைப் பெற வியாழக்கிழமை தோறும் சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews