கடகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. மனஸ்தாபங்கள் மாறும் நேரம்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் கடகம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடக ராசிக்கு குரு ஆறு மற்றும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி ஆவார். இதனால் கடகம் ராசி அன்பர்கள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துபவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

அதேபோன்று ஆறாம் இடத்திற்கு அதிபதியான குரு எதிரிகளை உருவாக்கவும் செய்வார் அவரே ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியாக இருந்து வெற்றி பெறவும் செய்வார். இதுவரை கடகத்திற்கு பத்தாம் இடத்தில் இருந்த குரு தொழிலில் நஷ்டங்களை கொடுத்திருப்பார்.

காரிய தடைகளை ஏற்படுத்தி இருப்பார். இந்த நிலையில் மே 1 அன்று குரு பெயர்ச்சி ஆகி 11-ஆம் இடத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்கும். காரிய வெற்றி ஏற்படும். தொழிலில் வளர்ச்சி அதிகரித்து லாபம் இரட்டிப்பாகும்.

முதலீடுகளால் முன்னேற்றம் ஏற்படுவது என பல நற்பலன்கள் கிடைக்க இருக்கிறது. அதேபோன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். மேலும் 11 ஆம் இடத்திற்கு இடம் மாறும் குரு திருமண தடைகளையும் நிவர்த்தி செய்வார்.

அதோடு குரு அஷ்டம சனியால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகளையும் தடுப்பார். குருவின் பார்வை அனைவருக்கும் நல்ல பலன்களை தான் கொடுக்கும். அவ்வகையில் குருவின் பார்வை கடக ராசிக்கு ஐந்தாம் இடத்தில் விழுகிறது.

இதனால் திருமணம் முடிந்த குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேப்போன்று குருவின் பார்வை மூன்றாம் இடத்தில் விழும்போது சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் மாறும்.

சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகளும் தீரும். அதோடு உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் நல்ல பலன்களைப் பெறவும் அஷ்டம சனியால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews