மேஷம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: இதை மட்டும் தவிர்த்திடுங்கள்!

Mesham Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது இந்த வருடம் மேஷம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள் எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

குரோதி வருடத்தின் தொடக்கத்தில் அதாவது சித்திரை மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்வார். அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான உச்சத்தில் தான் சூரியன் மேஷ ராசிக்குள் வருவார். இதனால் மேஷ ராசியினர் சட்டென கோபப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இந்த வருடத்தின் கிரக நிலைகளை பொருத்தமட்டில் கோபம் பல பிரச்சினைகளில் உங்களை சிக்க வைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கோபத்தை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது. அதே நேரம் சில கிரகங்கள் உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

அதாவது முயற்சி ஸ்தானத்தில் சந்திரனும் ஆறில் கேதுவும் லாப ஸ்தானத்தில் சனீஸ்வரனோடு இணைந்து செவ்வாய் இருப்பதாலும் டிசம்பர் மாதத்தின் இறுதி வரை பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது. அதன் பிறகு சில சிக்கல்கள் ஏற்படலாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

அதனை தவிர்ப்பதற்கு எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வருடம் முழுவதும் கேது ஆறில் இருக்கிறார் இதனால் பணிபுரியும் இடங்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராத வண்ணம் நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டும்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் சூரியன் உச்சமாவது மட்டுமல்லாது சுக்கிரனும் உச்சம் ஆகிறார். சுக்கிரன் நீர் அதிபதி சூரியன் நெருப்பு அதிபதி இவர்கள் இருவரும் உச்சமாக இருப்பதால் உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இந்த வருடத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் பல நன்மைகளும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வாய்ப்புகள் கைக்கூடி வரும். அதேபோன்று திருமண வரன்கள் நல்ல முறையில் அமையலாம்.

குழந்தைகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆனாலும் பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம். மேலும் பல நல்ல பலன்களை பெறுவதற்கு இந்த வருடத்தில் நீங்கள் அவ்வப்போது திருச்செந்தூர் முருகனை சென்று தரிசிப்பது நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews