தனுசு தமிழ் புத்தாண்டு பலன்கள்: பொறுத்தால் சொத்து உங்களுக்கு!

Dhanusu Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் தனுசு ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

அவ்வகையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனுசு ராசி அதிபதியான குரு சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார். அதன் பிறகு 15 நாட்களில் ஆறாம் இடத்திற்கு இடம் பெயர்வார். இதனால் குரு 2-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

இரண்டாம் இடத்தை குரு பார்க்கும் போது அதிகப்படியான வருமானம் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். அதே நேரம் குரு பன்னிரண்டாம் இடத்தை பார்க்கும் போது சுப செலவுகள் அதிகரிக்கும்.

ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய் மூன்றாம் இடத்தில் சனிஸ்வரனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார். இதனால் பூர்வீக சொத்துக்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையுடன் இருந்தால் ராசி அதிபதி குருவின் தயவால் சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரும்.

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் செவ்வாய் பெயர்ச்சி ஆகும் வரை பொறுமையாக இருக்கவும். செவ்வாய் சனியிலிருந்து விலகி ராகுவிடம் சென்ற பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நான்காம் இடத்தில் ராகு புதன் சுக்கிரன் சேர்ந்திருக்கிறார்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

ராகு நான்காம் இடத்தில் இருந்து கொண்டு உங்களுக்கு அதிகப்படியான குழப்பத்தை கொடுப்பார். ஒரு செயலை செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பமே உங்களை திணறச் செய்யும். அதேபோன்று 15 நாட்களில் ஆறாம் வீட்டிற்கு குரு செல்வதால் கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஏழாம் இடத்தில் சந்திரன் இருப்பதால் திருமண காரியங்களை இரண்டு மாத காலம் தள்ளிப் போடுவது சிறப்பு. பத்தாம் இடத்தில் கேது அமர்ந்திருப்பதால் தொழில் மாற்றங்களை தருவார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தடை தாமதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிக்கல்கள் விலகி நன்மைகள் பெற நரசிம்ம வழிபாட்டை தொடர்ந்து செய்து வருவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews