கடகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: இவர்களிடம் கவனமா இருங்க!

Kadagam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் கடகம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது

அதன்படி இந்த வருடம் 12ஆம் இடத்தில் அமரும் ராசி அதிபதியான சந்திரனால் நல்லதே நடக்கும். சின்ன சின்ன சிக்கல்கள் இருந்தாலும் இந்த வருடம் அதிர்ஷ்டமான வருடமாக தான் அமையும் வருடத்தின் தொடக்கத்திலேயே குழப்பமான மனநிலையுடன் இருப்பீர்கள்.

ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாகவே குரு பெயர்ச்சி வருவதால் மீண்டும் மனநிலை அமைதியாகிவிடும். முயற்சி ஸ்தானத்தில் கேது இருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனாலும் முயற்சியை கைவிடக்கூடாது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

8ல் சனியுடன் சேர்ந்து செவ்வாய் இருக்கிறார். சனி 8ல் இருப்பது சிறப்பு. ஆரோக்கிய கேடுகள் வராமல் தடுத்து விடுவார், 9ல் புதன், சுக்கிரன், ராகு இருக்கின்றனர்.புதனால் சுப நிகழ்வுகள் நடைபெற கூடும்.

நான்காம் இடத்தின் அதிபதியான சுக்கிரன் ஒன்பதில் அமர்வதால் மனைவியால் தேவையற்ற பிரச்சனை உருவாகலாம். சந்திரனும் சுக்கிரனும் ராசியில் இருப்பதனால் எதிர்பாலினத்தவர்களால் தேவையற்ற பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அதனால் பேசும் போதும் பழகும் போதும் கவனமாக இருக்க வேண்டும். பத்தில் சூரியன் குரு இருப்பதால் வெற்றி மேல் வெற்றி குவியும் என்றே சொல்லலாம் அதோடு பணியிடத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். இந்த வருடம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதுடன் எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாக இருங்கள். மேலும் நல்ல பலன்கள் பெற விநாயகர் மற்றும் நரசிம்மர் வழிபாடு செய்வது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews