மீனம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: நல்ல மாற்றங்கள் உண்டு!

Meenam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் மீனம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

வருடத்தின் தொடக்கத்தில் இரண்டில் சூரியன் குரு, நான்கில் சந்திரன், ஏழில் கேது, 12ல் சனி செவ்வாய், ஜென்மத்தில் ராகு புதன் சுக்கிரன் என கிரக நிலைகள் அமைந்துள்ளது. இந்த நிலைகள் உங்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொடுக்கும்.

இந்த வருடத்தின் தொடக்கமே ஏழில் கேதுவும் ஜென்மத்தில் ராகுவும் என தொடங்குவதால் பிரச்சனைகள் இருக்கும். அதே போன்று வருடம் தொடங்கி 15 நாட்களிலேயே குரு இரண்டாம் இடத்தை விட்டு மூன்றாம் இடத்திற்கு இடம் பெயர்கிறார்.

இதனால் வரவுகள் செலவாக மாறும். இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால் நீங்கள் பேசும் வார்த்தைகளால் பிரச்சனைகள் உருவாகலாம். அதனால் யாரிடம் பேசினாலும் கவனமாக ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேச வேண்டும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் ராகு கேதுவால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நான்கில் இருக்கும் சந்திரன் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பை கொடுப்பார்.

குருவின் பார்வை 7, 9 மற்றும் 11ஆம் இடத்திற்கு வருவதால் திருமணங்கள் கைகூடும், பண வரவு அதிகரிக்கும். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே சில புனித யாத்திரைகளை மேற்கொள்வது சிறப்பு. இல்லையென்றால் கஷ்டங்களை சந்திக்க வேண்டியது வரும் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இந்த வருடம் ராகு கேது சனி போன்றவர்கள் கொடுக்கும் சிக்கல்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள சித்தர்களையும் மகான்களையும் தேடி சென்று வணங்குங்கள். அது உங்களுக்கு நல்லதாக அமையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews