கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசிக்கு 4 மற்றும் ஏழாம் இடத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு. கன்னி ராசிக்கு குரு பகவான் மிக மிக முக்கியமானவர் கடினமான எந்த ஒரு செயலையும் எளிதாக முடிக்க கூடியவர்களாக கன்னி ராசி அன்பர்கள் இருப்பார்கள்.

இதுவரை கன்னி ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு பகவான் இருந்தார். இதனால் மனசோர்வு, மனக்கவலை, சொத்து பிரச்சனை, எடுக்கும் செயல்களில் தடங்கள் என பல பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சி ஆகி ஒன்பதாம் இடத்திற்கு செல்கிறார்.

இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க பெறும். மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். நான்காம் இடத்திற்கு அதிபதியாக இருக்கும் குரு 9ஆம் இடத்திற்கு வருவதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமான முடிவுக்கு வரும்.

உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் மாறும். அதேபோன்று ஏழாம் இடத்திற்கு அதிபதியான குரு ஒன்பதாம் இடத்திற்கு செல்வதால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். பண வரவு அதிகரிக்கும். குரு இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும்.

அவ்வகையில் குருவின் ஏழாம் பார்வை மூன்றாம் இடத்தில் விழுவதால் சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனஸ்தாபங்கள் மாறும். எந்த செயலிலும் முன்னேற்றம் ஏற்படும். குரு பகவான் ஐந்தாம் பார்வையாக ஜென்மஸ்தானத்தை அதாவது ஆறாம் இடத்தை பார்க்கும் போது ஊதிய உயர்வு ஏற்படும்.

தாமதப்பட்ட காரியங்கள் எல்லாம் நடந்து முடியும். அதோடு குரு பகவான் ஒன்பதாவது பார்வையாக ஐந்தாம் இடத்தை பார்க்கும் போது திருமணம் முடிந்து வெகு காலமாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மேலும் கூடுதல் பலன்களை பெற செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews