ரிஷபம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: குவியப் போகும் பணம்!

Rishabam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் பொறுமைசாலியான ரிஷப ராசியினருக்கு இந்த இந்த வருடத்தில் நன்மைகள் பலவும் நடக்க இருக்கிறது. ராசி அதிபதியான குரு லாப ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்லது. ஆகவே இந்த வருடம் சிறப்பான வருடமாக தான் இருக்கும். வருமானம் இரட்டிப்பாகி பணவரவு அதிகரிக்கும் என்று கூறலாம்.

அதேபோன்று 2ல் சந்திரன் 5ல் கேது 10ல் சனி, செவ்வாய் 11ல் ராகு, புதன், சுக்கிரன், 12ல் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளது. இதில் இரண்டில் இருக்கும் சந்திரன் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை கொடுப்பார்.

அதேநேரம் ஐந்தில் இருக்கும் கேதுவால் குலதெய்வ வழிபாட்டின் மூலமாக பிரச்சனைகள் ஏற்படலாம். அதாவது குலதெய்வ வழிபாடு செய்ய நினைக்கும் போது தடங்கல்கள் ஏற்படலாம். எனவே திட்டமிட்டு குலதெய்வத்தை பார்க்க செல்லாமல் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தவுடன் கிளம்பி சென்று தரிசித்து வருவது நல்லது.

இந்த வருடம் பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் மற்றும் வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். 10ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருப்பது சிக்கலான ஒன்றுதான். கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழில் செய்பவர்கள் ஊழியர்களை பொறுமையுடன் கையாள வேண்டும். அதேபோன்று 11ல் ராகு புதன் சுக்கிரன் இருப்பதால் இந்த வருடத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

ராசி அதிபதி குரு என்பதாலும் சுக்கிரனும் ராசியில் இருக்கிறார் என்பதாலும் இந்த வருடம் நீங்கள் நினைத்தது நிறைவேற வாய்ப்பு உள்ளது. எனவே வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிப்பவர்கள் இப்போது அதற்கான ஏற்பாடுகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இந்த வருடத்தை இன்னும் சிறப்பாக உக்கிரமான தெய்வங்களின் வழிபாடு நல்லது. உக்கிர தெய்வங்கள் என்றால் காளி போன்ற தெய்வங்களை வழிபடலாம். குறிப்பாக சுக்கிரன் என்பவர் பெருமாள் ஆகவே நரசிம்மரை வழிபாடு செய்வது மேலும் சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews