விருச்சிகம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. காரிய தடை விலகும்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்கு இரண்டு மற்றும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான். இரண்டு முக்கியமான ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் இதுவரை ஆறாம் இடத்தில் இருந்தார். இதனால் தொழிலில் நஷ்டம், மனசோர்வு, தேவையற்ற பிரச்சனைகள் அதிகப்படியான செலவு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் குரு பெயர்ச்சியாகி ஏழாம் இடத்திற்கு செல்கிறார். இரண்டாம் இடத்திற்கு அதிபதியான குரு, ஏழாம் இடத்திற்கு வருவதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்றிணைவார்கள்.

அதேபோன்று ஐந்தாம் இடத்திற்கு அதிபதியான குரு ஏழாம் இடத்திற்கு செல்வதால் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். எந்த செயலிலும் வெற்றி கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நற்பெயர் கிடைப்பதோடு புகழின் உச்சிக்கு செல்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். குரு பகவான் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும்.

அவ்வகையில் குருவின் பார்வை விருச்சிக ராசியின் ஜென்மஸ்தானத்தில் விழும்போது ஆரோக்கிய குறைபாடுகள் விலகும். எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். தொடர் முயற்சியால் தடைபட்ட வெற்றி கிடைக்கும்.

அதேபோன்று குருவின் பார்வை பதினோராம் இடத்தில் விழும்போது பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள் என்று சொல்லலாம். குரு பகவானின் பார்வை மூன்றாம் இடத்தில் விழும்போது காரியங்களில் ஏற்பட்ட தடை தாமதங்கள் விலகும்.

சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியாளர்களிடம் இருக்கும் பிரச்சனை முடிவுக்கு வரும். கூடுதல் பலன்களைப் பெற பௌர்ணமி தினத்தன்று பார்வதி அம்பாளை வழிபாடு செய்வது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews