உலகசாதனை பெற்ற கால பைரவர் சிலை…..! கும்பாபிஷேகத்தைக் காணத் தவறாதீர்கள்….!!!

Published:

தேய்பிறை அஷ்டமி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் பைரவர் தான். நம்ம தலை எழுத்தே சரியில்லப்பா…அதான் வாழ்க்கைல இவ்ளோ கஷ்டப்படுறேன்..னு நொந்து போய் உள்ளவர்கள் இந்தக் கால ரைபரவரைத் தான் தரிசனம் பண்ண வேண்டும். இவர் நம் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர்.

அப்படிப்பட்டவரது சிலை தமிழகத்தில் உலகசாதனையுடன் திகழ்கிறது என்றால் நமக்குப் பெருமை தானே. அது எங்கே உள்ளது…அதன் விவரம் என்ன என்று பார்ப்போமா…

கும்பாபிஷேகம்

Kaalabairavar
Kaalabairavar

உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தி 4 கைகளுடன் 39 அடி உயர காலபைரவர் சிலை. உலகிலேயே மிக உயரமான இந்த கால பைரவர் சிலைக்கு 2023 மார்ச் மாதம் 13ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த சிலை உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.

பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகம் 4 கால பூஜையாக நடைபெற உள்ளது. 10.03.2023 அன்று மாசி மாதம் 26ம் நாளில் காலை 11 மணிக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படும். 11ம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி முதல் கால பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு தீர்த்தம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Bairavar
Bairavar

12ம் தேதி காலை 10 மணிக்கு 2ம் கால பூஜை, மாலை 5 மணிக்கு 3ம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மியும் நடைபெறுகிறது. 13ம் தேதி காலை 6 மணிக்கு 4ம் கால பூஜை, காலை 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 10.03.2023 முதல் 13.03.2023 வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

சிவனின் ரூபம்

காலபைரவர்…சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வடகிழக்குப்பகுதியில் நின்றகோலத்தில் காட்சி தருபவர். பன்னிரு கைகளுடன்,நாகத்தை பூணுலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசகயிறு,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் காட்சி தருபவர்.

கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள், 8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துப்பராகவும் கூறப்படுகிறது.

காசியில் கால பைரவருக்கு 8 இடங்களில் கோவில்கள் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காலபைரவர் கோவில் உள்ளது. பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காலபைரவருக்கு ஈரோட்டில் பிரமாண்ட சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

எப்படி செல்வது?

ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் என்ற இடத்தில் ஸ்வர்ண பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் எங்கும் இல்லாத வகையில் நுழைவு வாயிலில் கோபுரத்துக்கு பதிலாக பிரமாண்ட காலபைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது.

இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டு ள்ளது. 4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப் பட்டுள்ளது.

கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மட்டும் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.

64 வகை பைரவர்

இந்த கோவிலில் மூலவராக ஸ்வர்னாகர்ஷண பைரவர் உள்ளார். அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயரமான இந்த கால பைரவர் சிலைக்கு வரும் மார்ச் மாதம் 13ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆனாலும் தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் காலபைரவரைக் காண திரண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த சிலை யுனிக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தக்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் உங்களுக்காக...