உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த துக்கம்: பிரபலங்கள் இரங்கல்

Published:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அவர்களின் சகோதரர் எதிர்பாராத விதமாக திடீர் என காலமானதை அடுத்து அரசியல் பிரமுகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். அவர் சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் கலந்து சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ponmudi brother

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சையின் பலன் இன்றி மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரது உடல் இன்று காலை அவரது விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்மொழியின் சகோதரர் மறைவை அடுத்து அரசியல் பிரபலங்கள் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...