மலேசிய படப்பிடிப்பில் திடீர் விபத்து.. விஜய் ஆண்டனிக்கு படுகாயம்

By Bala Siva

Published:

மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனிக்கு விபத்து காரணமாக படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்

அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ’பிச்சைக்காரன் 2’. ஏற்கனவே பிச்சைக்காரன் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ’பிச்சைக்காரன் 2’ படத்தை விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது திடீரென நடந்த விபத்து காரணமாக விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கோலாலம்பூரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...