முருகனை சரணாகதி அடைய என்ன செய்வது? கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் என்ன வேறுபாடு?

முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும்…

முருகப்பெருமான் அவதரித்த நாளான சிறப்புக்குரிய வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் பல நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகிறது. அதனால்தான் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்கள் வெள்ளம் போல திரண்டு கோவிலுக்குப் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.

வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானை எட்டுத்திக்கும் நினைத்துப் பாடி வழிபடுவது தான் கந்த குரு கவசம். அந்த நாள் முழுவதும் அந்தப் பாடலைப் பாடி வழிபடலாம். கந்த குரு கவசம் என்றால் முருகனைக் குருவாக நினைத்துப் பாடுவது, கந்த சஷ்டி கவசம் என்பது முருகனை வைத்தியராக நினைத்து வழிபடுவது. முருகனை மருத்துவராக நினைத்துப் பாடினால் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் நீங்கணும் நினைத்துப் பாடுவது கந்த சஷ்டி கவசம்.

உடலில் உள்ள மாயை எல்லாம் நீங்கி உன்னிடம் சரணாகதி அடையணும்னு முருகப்பெருமானை நோக்கிப் பாடுவது கந்த குரு கவசம். அதாவது பேரின்ப வாழ்க்கை, சிற்றின்ப வாழ்க்கைன்னு இருக்கு. இந்த இரண்டையும் சமமாகப் பெறணும்னா கந்த குரு கவசம். இந்த இரண்டுக்கும் இடையூறாக இருக்கக்கூடிய நோய், கடன், எதிரி எல்லாம் குறையணும்னா கந்த சஷ்டி கவசம்.

வைகாசி விசாகம் அன்று பஞ்சமுக விளக்கை ஏற்றலாம். வலம்புரி சங்குக்கு வாசனை மலர்கள் வைத்து, பன்னீர் வைத்து வழிபடலாம். இரவு முழுவதும் அது பூஜை அறையில் வைத்திருந்து மறுநாள் அந்த நீரில் வாசனைத்தன்மை எல்லாம் ஆகாஷணம் ஆகி இருக்கும். அதை நம்ம வீடு முழுவதும் தெளித்து விடலாம்.