திருமணத்தடை, சொத்து பிரச்சனையைத் தீர்க்கும் வைகாசி விசாகம்

யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன்…

யாருக்குத் தான் பிரச்சனை இல்லை. பிரச்சனை இருந்தால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். நம்மையும் பிரச்சனையைத் தீர ஓட வைக்கும். இல்லாவிட்டால் ஒரே இடத்தில் முடங்கிப் போவோம் அல்லவா. அதனால் திருமணத்தடை, சொத்துப்பிரச்சனை, அண்ணன் தம்பி தகராறு போன்ற சோதனைகள் எல்லாம் முருகப்பெருமானின் அருளால் நிவர்த்தி ஆகும். அதுவும் வைகாசி விசாகத்து அன்று. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் இதுதான். எப்படி வழிபடுவதுன்னு பார்க்கலாமா…

வைகாசி மாத விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தார். அவருக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. அதனால் அது மிக முக்கியமான நாள். இன்னொன்னு துர்க்கைக்கும் அதுதான் விசேஷம். கணவன், மனைவி விவாகரத்து பிரச்சனை வந்து நல்லபடியாக சேர விரதம் இருந்து திருப்பரங்குன்றத்து முருகனை மனதார நினைத்தோ நேரில் சென்றோ வழிபட வேண்டும்.

மீண்டும் கணவன், மனைவி சேரும்பட்சத்தில் அந்த ஆலயத்திலோ அல்லது வேறு ஆலயத்திலோ முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பதாக வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் திருமணத்தடை, திருமண தோஷம் உள்ளவர்களுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்கும். ரொம்ப நாள் எதிரி தொல்லை, ஒரே வீட்டில் அண்ணன், தம்பி சொத்து பிரச்சனை இருந்தால் முருகப்பெருமானின் ஆலயத்தில் உள்ள துர்க்கைக்கு விரதம் இருக்க வேண்டும்.

சொத்து பிரச்சனை, பாகப்பிரிவினையைத் தீர்த்து வைக்கும் தெய்வம் இதுதான். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் நிறத்தில் துர்க்கைக்கு பட்டு சமர்ப்பணம் பண்ண வேண்டும். செண்பக மலர்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும். எலுமிச்சைக்கனி 54 அல்லது 108 எடுத்து அந்த சன்னதியில் இருந்து கோர்த்து மாலையாக தானம் கொடுக்க வேண்டும். சொத்துப் பிரச்சனைக்கு முடிவு கேட்க, அண்ணன் தம்பி பிரச்சனை தீரும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். முருகப்பெருமான்