குழந்தைகளுக்கு ஜெல்லி கொடுக்க வேண்டாம்.. 1.5 குழந்தை மூச்சு திணறி பரிதாப பலி..!

  மத்திய பிரதேசம் மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்பூர் கிராமத்தில் 1.5 வயது சிறுவன் ஜெல்லி சாப்பிட்டதன்போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஜெல்லி…

jelly

 

மத்திய பிரதேசம் மாநிலம் சேஹோர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிர்பூர் கிராமத்தில் 1.5 வயது சிறுவன் ஜெல்லி சாப்பிட்டதன்போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஜெல்லி போன்ற சில உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

1.5 வயது குழந்தை ஆயுஷ் லோட்சி ஆயுஷ், கரண் சிங் லோட்சி தம்பதியின் ஒரே மகன். இந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் குழந்தை ஆசைப்பட்டது என்பதற்காக அவருக்கு ஜெல்லி வாங்கி பெற்றோர் கொடுத்தனர். ஆனால் அந்த ஜெல்லி குழந்தையின் தொண்டையில் திடீரென சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டபோது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால் மாவட்ட மருத்துவமனையில் குழந்தையின் நிலைமை மோசமடைந்து, மருத்துவரால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஜெல்லி ஆயுஷின் தொண்டையில் சிக்கி மூச்சுக்குழாயை அடைத்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், பெற்றோர் இதனை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட பின்னர் தான் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிவில் சர்ஜன் பிரவீர் குப்தா இந்த சம்பவம் குறித்து கூறியபோது, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சில உணவுப் பொருட்கள் கொடுப்பதில் உள்ள ஆபத்துகளை பெற்றோருக்கு எச்சரிக்கை அளித்துள்ளார். சிறிய குழந்தைகளின் விழுங்கும் திறன் முழுமையாக வளரவில்லை, எனவே வட்டமான, ஒட்டும் தன்மையுள்ள, கடினமான பொருட்கள் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என கூறியுள்ளார்.

இந்த துயர சம்பவம், பெற்றோர்களுக்கு சிறுவர்களுக்கு உணவு கொடுக்கும் போது மிகவும் கவனம் தேவை என்பதை வலியுறுத்துகிறது. குழந்தையின் வயதிற்கும் வளர்ச்சி நிலைக்கும் ஏற்றதாக உணவு இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.