மனதில் உள்ள குழப்பங்களையும், தடைகளையும் இந்த சோமவார வழிபாடு நீக்கி விடும். இன்று (27.1.2025) கோவிலுக்கு சென்று வழிபடுவதோடு நந்திக்கு அபிஷேகத்திற்கு பொருட்களை வாங்கித்தரலாம். சோமவார பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை.
சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம். சிவஆலயங்களில் நாளை மாலையில் சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையானது.
உலக மக்களைக் காக்க விஷத்தை குடித்து அதை கழுத்தில் தக்க வைத்துக் கொண்டவர் சிவபெருமான். அந்த நாள் திரயோதசி நாள் மாலை வேலையில் சிவன் மயக்கம் தெளிந்த நேரம் பிரதோஷம் வேளை.
விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சோமம் என்றால் சந்திரன்.திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான்.சந்திரன் மனோகாரகன்.
நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம். நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம். மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல் துன்பப்படுபவர்கள் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை. சோமவாரப் பிரதோசம் மனக்குழப்பத்தை தீர்க்கும்.
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.பால் அபிஷேகம் செய்தால் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்.தயிர் அபிஷேகத்தினால் வளங்கள் பல உண்டாகும்,
தேனபிஷேகம் இனிய குரலும், பழங்களால் அபிஷேகம் செய்தால் நிலத்தில் விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் அபிஷேகத்தினால் செல்வம் பெருகும்