இப்போதெல்லாம் எந்தப் படம் எடுத்தாலும் ஓடிடி தான். தியேட்டருக்குப் போய் மக்கள் படம் பார்க்கறதே இல்ல. ஓடிடி தளத்தில் வீட்டில் இருந்தபடியே தியேட்டர் எபெக்ட்ல படத்தை அதுவும் புதுசு புதுசாகப் பார்த்துடறாங்க. இதனால் தியேட்டருக்கு வர்றவங்க கூட்டமும் குறைஞ்சிட்டுன்னே சொல்லலாம். சில படங்கள் தியேட்டருக்குக் கூட வராம டைரக்டா ஓடிடி தளத்துல ரிலீஸ் ஆகவும் செய்கின்றன. அது சரி. விஷயத்துக்கு வருவோம்.
தமிழ்சினிமாவின் பிசினஸ் இப்போது ஓடிடி தளத்துல சரிஞ்சிக்கிட்டு வர்றதா சொல்லி இருந்தீங்க. அதுக்கு என்ன காரணம்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

ஓடிடி தளத்தைப் பொருத்தவரைக்கும் அவங்க சேரிட்டி சர்வீஸா பண்றாங்க. ஒரு திரைப்படத்தை வாங்கும்போது அந்தத் திரைப்படத்தால் தன்னோட சந்தாதாரர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்குக் கூடுது என்பதை ஓடிடி நிறுவனத்துல பார்ப்பாங்க. அப்படிக் கூடாதபோது அதுபோன்ற படங்களை வாங்கறதை அவங்கக் குறைச்சிக்கிறாங்க. அதன்காரணமாகத் தான் ஓடிடியின் விலை மிகப்பெரிய அளவில் சரிஞ்சிருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எப்போதும் தியேட்டர்ல படத்தைப் பார்க்கறவங்க கூட அதுக்கு நிறைய செலவாகுதுன்னு வீட்டுல இருந்து பார்க்கணும்னு நினைக்கிறாங்க. குறிப்பாக தியேட்டர்ல போய் ஒருவர் படம் பார்த்தால் டிக்கெட் விலை ரூ.150 ஆகிறது. அதே போல 4 பேர் போனால் ரூ.600.
அதுதவிர ஸ்னாக்ஸ், காபி, போக்குவரத்து என்றால் ரூ.1000த்தைத் தொட்டு விடுகிறது. ஒரு படத்துக்கே இவ்வளவு தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. அதனால் பலரும் ஓடிடிக்கு வந்துவிட்டனர். இதுல பல படங்கள் பார்க்க முடியும். அதுவும் நாம நினைத்த நேரத்தில் பார்க்கலாம். ஓடிடி என்றால் ஆங்கிலத்தில் ஓவர் தி டாப் மீடியா சர்வீஸ் (Over The Top media service)என்று பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர்.