தமிழ்த்திரை உலகில் இப்போதெல்லாம் படம் வெளியாவதற்கு முன்பே வியாபாரம் படுஜோராக நடக்கிறது. அது பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் என்றால் அதற்கேற்ப வியாபாரம். படத்தின் ஆடியோ உரிமை, படத்தின் சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை என்று பல்வேறு வகையில் வருமானம் வந்துவிடுகிறது. படத்தின் தயாரிப்பு செலவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி இதுலயே வந்து விடுகிறது.
அந்தப் படத்தின் கதை, நடிகர்கள், இயக்குனர்களைப் பொருத்தும் அவர்களது மார்க்கெட்டைப் பொருத்தும் இந்த வியாபாரம் சூடுபிடிக்கிறது. இதன் பிறகு படத்தைத் திரையிடும்போது விநியோக உரிமை, படம் ரிலீஸ் ஆனதும் முதல் 3 நாள்களிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டி விடுகிறது. அந்த வகையில் படம் ரசிகர்களைக் கவர்ந்து விட்டால் 30 நாள் வரை வசூல் மழைதான். அந்த வகையில் படத்தின் பர்ஸ்ட் காப்பின்னு சொல்றாங்களே.

சினிமாவில் பர்ஸ்ட் காப்பிங்கறது எதுல பயன்படுத்தப்படுது? பர்ஸ்ட் காப்பி பேசிஸ்ல திரையிடுறதுன்னா என்னன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.
சினிமாவில் பர்ஸ்ட் காப்பி என்பது எல்லா பணிகளும் முடிவடைந்து அந்தப் படத்தைத் தியேட்டர்ல திரையிடலாம் என்ற நிலைக்கு அந்தப் படம் வரும்போது அந்தப் படம் சம்பந்தப்பட்ட முதல் பிரதி எடுப்பாங்க. முதல் பிரதியோடு அந்தப் படம் சம்பந்தப்பட்ட எல்லா வியாபார உரிமைகளையும் தருவதுதான் பர்ஸ்ட் காப்பி. ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து அந்தப் படத்தோட பர்ஸ்ட் காப்பியை ஒருத்தர் வாங்கிட்டார் என்றால் அதற்குப் பின்னால அந்தப் படத்தைத் தயாரித்தவருக்கு எந்த உரிமையும் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.