திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம். அதையொட்டி முருகப்பெருமானின் சிறப்புப் பதிவுகளைப் பார்க்கலாம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக விளங்கும் இடம் திருச்செந்தூர். இங்கு 2 மூலஸ்தானம் இருக்கு. முருகரைப் பார்த்துட்டு வரும்போதே சண்முகரின் சன்னதியைப் பார்க்கிறோம். திருச்செந்தூரில் மூலவருக்கு இருக்கும் அதே சிறப்பு சண்முகருக்கும் இருக்கு.
மற்ற கோவில்களில் உற்சவர் ஒருவர்தான் இருப்பார். ஆனால் இங்கு பலர் உண்டு. சண்முகர் ஒரு உற்சவர். ஜெயந்திநாதர் ஒரு உற்சவர். அவர்தான் சம்ஹாரத்துக்குப் போவார். அடுத்து குமரவிடங்கர். இவருக்கு மாப்பிள்ளை சுவாமின்னு பேரு. இன்னொருவர் அலைவாய் பெருமாள். மூலஸ்தானமாக எழுந்தருளியுள்ள மூர்த்தி யாருன்னா அது சண்முகர்தான்.
முருகப்பெருமான் திருச்செந்தூரில் பூஜாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். அவர் கையில் மலர் வைத்து சிவபெருமானை பூஜிக்குற வேளையில் தேவர்கள் கூப்பிட்ட உடனே அப்படியே திரும்பி தேவர்களுக்குக் காட்சி கொடுக்கிறார். அதுதான் அவரது ரூபம். அவரது கோலம்.
ஆனால் சண்முகர் மட்டும்தான் வள்ளி, தேவசேனையுடன் காட்சி தருவார். திருச்செந்தூரில் மூலஸ்தானத்தில் இருக்குற சுப்பிரமணியசுவாமிக்கு எவ்வளவு சிறப்பு இருக்கோ அதே அளவுக்கு உயர்வும் சிறப்பும் நம்முடைய சண்முகருக்கு உண்டு. மூலஸ்தானத்தில் உள்ள அந்த மூர்த்தியை பூஜா மூர்த்தின்னு சொல்கிறோம். பூ என்றால் பூர்த்தி செய்தல். ஜா என்றால் உண்டாக்குதல். அதாவது மல மாயைக் கன்மங்களைப் பூர்த்தி செய்து சிவஞானத்தை உண்டாக்கித் தருகிற பூஜா மூர்த்தி.
தேவர்கள் கூப்பிட்ட உடனே கையில இருக்குற பூவைக் கூட கீழே வைக்காமல் அப்படியே திரும்பி அவர்களுக்குக் காட்சி தருகிறார். அதுபோலவே பக்தர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் கூப்பிட்ட உடனே வந்து காட்சி தந்து அருள்புரிவார்.
அதுபோலவே ஷண்முகரும் இகலோக நலம், பரலோக நலம், முக்தி நலம் என 3 நலன்களையும் தருவார். ஆக 2 மூலவர்களையும் பார்த்து வணங்கி விட்டு நாம் செல்லும்போது வாழ்க்கையில் எல்லா நலன்களும் நமக்குக் கிட்டி விடும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.