என்னடா நடக்குது இங்கே… கூரியர் ஊழியர் பலாத்காரம் செய்தது நாடகமா? இருவரும் நெருங்கிய நண்பர்களா? செல்பி எடுத்தது அந்த பெண் தான்.. அதிர்ச்சி தகவல்..!

  புனேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், கூரியர் டெலிவரி ஊழியர் போல் நடித்து, 22 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய…

rape1

 

புனேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், கூரியர் டெலிவரி ஊழியர் போல் நடித்து, 22 வயது இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய நண்பர் என்று தெரிய வந்துள்ளது. இது, சம்பவம் குறித்து அந்த பெண் முதலில் அளித்த வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை மீது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கூரியர் டெலிவரி ஊழியர் போல வீட்டுக்குள் நுழைந்ததாகவும், தனக்கு எந்த கூரியரும் வரவில்லை என்று தான் கூறிய பின்னரும், கையொப்பம் கேட்டு வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். கதவை திறந்ததும், அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தனது தொலைபேசியை பயன்படுத்தி ஒரு ‘செல்ஃபி’ எடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அந்த செல்ஃபியில் பெண்ணின் முதுகுப்பகுதியும், குற்றம் சாட்டப்பட்டவரின் முகத்தின் ஒரு பகுதியும் தெரிந்ததாக கூறப்பட்டது. மேலும், “சம்பவம் குறித்துப் புகார் அளித்தால், அவரது படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்று குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டல் செய்தி அனுப்பியதாகவும், “நான் மீண்டும் வருவேன்” என்று அந்த செய்தியில் இருந்ததாகவும் காவல்துறை ஆரம்பத்தில் தெரிவித்தது.

ஆனால், விசாரணையின் போக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் என்றும், அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த செல்ஃபியை பெண்ணேதான் எடுத்தார் என்றும் தெரியவந்த போது காவல்துறை குழப்பமடைந்தது. இது குறித்து புனே நகர காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறியதாவது:

“அவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிவார்கள், மேலும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்த பெண் ஒரு தொழில்முறை வல்லுநர், முதலில் அவரது முகம் தெளிவாக தெரிந்த செல்ஃபியை பெண்ணேதான் எடுத்து, அதனை ‘எடிட்’ செய்து, மிரட்டல் செய்தியையும் தானே டைப் செய்துள்ளார் என்பதை காவல்துறை விரைவில் கண்டறிந்தது.

மேலும், முன்னர் சந்தேகிக்கப்பட்டபடி, பெண்ணை மயக்கமடைய செய்ய எந்த ரசாயன ஸ்பிரேயும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் உறுதியானது. “பாலியல் பலாத்காரம் குறித்த இந்த குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்ட பெண் ஏன் கூறினார் என்பதை நாங்கள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம். பெண்ணின் மனநிலை தற்போது நன்றாக இல்லாததால், இது இன்னும் தீவிர விசாரணையில் உள்ளது” என்று ஆணையர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னரே குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் பணி நடைபெறும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.