திருச்செந்தூர் சண்முகப்பெருமான் என்றாலே நமக்குள் பக்தி பரவசம் வந்து விடும். லட்சக்கணக்கான பக்தர்கள் விசேஷ தினங்களில் வந்து சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர். நாளைய தினம் (7.7.2025) திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதையொட்டி சண்முகப்பெருமான் செய்த லீலைகளைப் பார்க்கலாமா…
டச்சுக்காரர்கள் தமிழகத்தில் கொள்ளையடித்து கடல் மார்க்கமாகச் சென்றனர். அப்போது திருச்செந்தூரில் உள்ள சண்முகர் சிலையையும் தூக்கினர். அவங்க அதை ஏதோ ஒரு சிலை. அதை உருக்கி தங்கத்தை எடுத்துக்கலாம்னு நினைச்சாங்க. ஆனால் அவங்களால ஒரு அடி கூட நகரவே முடியல. கடும் புயல், காற்று, மழை என்ன பண்றதுன்னே தெரியல. என்னமோ ஆகிடுச்சு. அவங்களுக்கு உயிர் பயம். என்ன செய்றதுன்னு தெரியாம திகைச்சு நிக்கிறாங்க.
அப்போ தான் அங்கு இருக்குற நம்ம மக்கள் அவங்களுக்கு சொல்றாங்க. இதுக்கு காரணம் நீங்க எடுத்து வச்சிருக்குற சண்முகர் சிலை தான். அது இருக்குற வரைக்கும் நம்மால எல்லையைத் தாண்ட முடியாதுன்னு சொன்ன உடனே டச்சுக்காரர்கள் பயந்து போய் கடலில் தூக்கிப் போட்டுட்டாங்க. கோவில்ல சண்முகர் சிலை இல்லை. அவரு இல்லாம கோவில் எப்படி இருக்கும்?
கடைசியில் வேற ஒரு சண்முகர் சிலையை செஞ்சிடலாம்னு நினைக்கிறாங்க. அப்போ தான் வடமலையப்பப்பிள்ளையின் கனவில் முருகப்பெருமான் வருகிறார். கடலில் தானே நான் இருக்கேன். இன்னொரு சிலை எதுக்குன்னு கேட்குறார். கடல்ல நான் எங்கேன்னு தேடுவேன்னு கேட்கிறார் வடமலையப்பபிள்ளை. அதற்கு முருகப்பெருமான் ‘கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். வானில் கருடன் வட்டமிடும். அங்கு வந்து என்னைத் தேடிப்பார்.
நான் உன் கைகளில் கிடைப்பேன்’ என்றார். அதே போல வடமலையப்பப்பிள்ளையும் ஆள்களுடன் சென்று கடலில் மூழ்கி தேடி எடுத்ததுதான் இன்று நாம் வணங்கும் சண்முகர். அவர் அப்படியே கோவில்ல மட்டும் இல்லை. கடல் வரைக்கும் உலா வந்துட்டு என் பக்தர்களை நான் பார்க்கணும். என்னோட இடத்தில் வைன்னு சொல்லி தன்னோட இடத்துக்கு திரும்ப வந்து அமர்ந்து இருக்கக்கூடிய தெய்வம்னா இந்த சண்முகர் எப்பேர்ப்பட்ட தெய்வம்னு பாருங்க என்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி.