திமுக கூட்டணி உடைவதும், மைனாரிட்டி வாக்குகள் சிதறுவதும் ஆகிய இந்த இரண்டு காரணங்களும் விஜய் ஆட்சி அமைக்க உதவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இத்தனை காலம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்று வந்தது என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்தான்: ஒன்று, வலுவான கூட்டணி; இரண்டாவது, 100% மைனாரிட்டி வாக்குகளை பெறுவது. மைனாரிட்டி ஓட்டுகளை பெறுவதற்காக திமுக எந்த பிரச்சாரமும் செய்ய தேவையில்லை, தானாகவே அந்த வாக்குகள் திமுகவுக்கு விழுந்துவிடும். அதுமட்டுமின்றி, மைனாரிட்டி வாக்காளர்கள் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் வாக்களிப்பார்கள். எனவேதான், திமுக இந்த இரண்டு சாதகமான காரணங்களால் வெற்றி பெற்றும், நல்ல வாக்கு சதவீதத்தையும் பெற்று வந்தது.
ஆனால், தற்போது விஜய் இந்த இரண்டையும் உடைக்கிறார். முதல் கட்டமாக, திமுக கூட்டணியை உடைக்க இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது என்றே சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் வெளியேறிவிட்டால், திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், மைனாரிட்டி ஓட்டுகள் முழுமையாக, அதாவது 100% திமுகவுக்கு விழுந்து வந்த நிலையில், தற்போது திமுகவின் மீது மைனாரிட்டிகள் அதிருப்தியில் உள்ளனர். வேறு வாய்ப்புகள் இல்லாததால் அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய் என்ற ஒரு புதிய வாய்ப்பு வந்துவிட்டதால், மைனாரிட்டி வாக்குகளில் சுமார் 35 முதல் 50 சதவீதம் வரை விஜய்க்கு செல்வதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே, திமுகவின் வெற்றிக்கு காரணமான கூட்டணி பலத்தையும் மைனாரிட்டி வாக்குகளையும் விஜய் தன் பக்கம் இழுத்துவிட்டதால், விஜய் நிச்சயம் ஆட்சி அமைப்பது உறுதி என்றும், தவெக தேர்தலில் 30-35 சதவீதம் வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.