கெட்ட சக்தியைக் காட்டிக் கொடுக்கும் கல் உப்பு… அது எப்படின்னு தெரியுமா?

வீட்டுல எப்பவுமே லட்சுமி கடாட்சமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதுக்கு என்னென்ன விஷயங்கள் செய்யணும்னு பார்க்கலாமா… பாரம்பரியமா நிறைய விஷயங்களை நாம செய்யணும். சாணத்தைப் போட்டு மொழுகுறது தான் முதல் விஷயம். ஆனா இன்னைக்கு…

வீட்டுல எப்பவுமே லட்சுமி கடாட்சமா இருக்கணும்னுதான் எல்லாருமே ஆசைப்படுவாங்க. அதுக்கு என்னென்ன விஷயங்கள் செய்யணும்னு பார்க்கலாமா…

பாரம்பரியமா நிறைய விஷயங்களை நாம செய்யணும். சாணத்தைப் போட்டு மொழுகுறது தான் முதல் விஷயம். ஆனா இன்னைக்கு இதை பெரும்பாலும் ஃபாலோ பண்றதில்ல. அதுக்கான வாய்ப்புகளும் இல்லை. சுத்தம் இருந்தாலே அந்த இடத்தில் மகாலட்சுமி வருவாள். இதுதான் முதல் விஷயம். வாசனைத்திரவியங்களைப் பயன்படுத்தி வீட்டைக் கமகமன்னு மணம் கமழச் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை சாம்பிராணி போட்டுப் பாருங்கள். மகாலட்சுமி வீட்டுக்கு வருவாள். அடுப்புக்கரி தீய சக்தியை விலக்கும் ஆற்றல் கொண்டது. அதே போல தனம் தரும் ஆற்றலும் உண்டு. கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கு எந்த பவரும் இல்லை. அசைவ உணவை அந்தக் காலத்தில் மருமகளுக்கோ, மகனுக்கோ சமைத்துக் கொடுப்பார்கள். அப்போது கூடவே அடுப்புக்கரியையும் போட்டுத்தான் அனுப்புவார்கள். அது கெட்ட சக்தியை அண்டவிடாது.

அதனால்தான் அப்படி செய்வார்கள். அந்தக் காலத்தில் பொதுவாகக் காலை அலம்பிட்டுத்தான் வீட்டுக்குள்ள போவாங்க. நிலை வாசல்படிக்கு பொட்டு, மஞ்சள் குங்குமம் கண்டிப்பாக வைங்க. அந்த வகையில் வாஸ்து நாளில் வைப்பது சிறந்தது. அஷ்டதிக்கு பாலகர்கள் நிலைவாசல்படியில் தான் இருப்பாங்க. அது போக குலதெய்வம், மகாலட்சுமியும் அங்குதான் வாசம் செய்வார்கள். அதனால் அங்கு தினமும் அகல்விளக்கு ஏற்றுவதும் நல்லது. அது அபரிமிதமான சக்தியைக் கொண்டு வரும்.

வீட்டைச் சுற்றிலும் கல் உப்பை வைத்துப் பார்த்தால் தெரியும். சில நாள்களில் அது கருப்பு கலராக மாறினால் செய்வினைக் கோளாறு இருக்குன்னு அர்த்தம். அப்படியே இருந்தால் ஒன்றுமில்லை என்று அர்த்தம். கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கு லட்சுமி கடாட்சம் இல்லை. செவ்வாய், வியாழன் இரு நாள்களும் அடுப்புக்கரி கங்குல குங்கிலியம் போட்டால் லட்சுமி கடாட்சம் நிச்சயம் உண்டு.