பிறந்த தேதிப் பலன்கள்: 8-ம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!

மனதால், உடலால் விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பினைக் குணமாகக் கொண்ட 8 ஆம் தேதியில் பிறந்தவர்களே! செய்யும் விஷயங்கள் அனைத்திலும் தோல்வியினைக் கண்டு சலித்துப் போய் இருப்பீர்கள்; ஆனாலும் விடாப் பிடியாய் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும்…

pirantha naal palan day 8

மனதால், உடலால் விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பினைக் குணமாகக் கொண்ட 8 ஆம் தேதியில் பிறந்தவர்களே! செய்யும் விஷயங்கள் அனைத்திலும் தோல்வியினைக் கண்டு சலித்துப் போய் இருப்பீர்கள்; ஆனாலும் விடாப் பிடியாய் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் விழுந்த கணத்திலேயே எழுந்து நிற்பீர்கள்.

நம்பிக்கைத் துரோகத்தால் ஒருமுறை இருமுறை அல்ல; பலமுறை பாதிக்கப்பட்டவர் நீங்கள். மனச் சுமை, மன அழுத்தம் என மனதளவிலான பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

உங்களின் விடாமுயற்சிக்கு ஒருநாள் விடிவு கிடைத்தே தீரும், குடும்ப வாழ்க்கையில் பாரம் அதிகமாகவே இருக்கும்; சிறு வயது முதலே பொறுப்புகளைத் தலையில் சுமந்து வாழ்வீர்கள்.

சிறு சிறு மனக் கசப்புகள் குடும்பத்தில் எப்போதும் இருக்கும், ஆழ்ந்த யோசனை செய்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள். உங்களின் பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல் தைரியமாகச் செயல்படுவீர்கள். அது உங்களின் பலம் மட்டுமின்றி பலவீனமுமாகும். மன பாரத்தினைக் குறைக்க தெய்வத்திடமாவது குறைந்தபட்சம் முறையிடுங்கள்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு உடனடியாக ஒரு முடிவினை எடுக்காதீர்கள்; மற்றவர்களை அப்படியே நம்புவதுதான் உங்களின் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கும்.

தியாக மனப்பான்மைக்குப் பெயர் போனவர் நீங்கள்; குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள்தான் எப்போதும் முன்னுதாரணம். ஆனால் கூட்டுத் தொழில் உங்களுக்கு எப்போதும் ஒத்து வராது; நல்ல நண்பர்கள் கூட்டணி உங்களுக்கு எப்போதும் அமையாது.

தனித்து செயல்படுவதுதான் உங்கள் பலமாகும், புண்ணியத்தினை அதிகம் சேர்ப்பவர்கள்தான் நீங்கள். குடும்பத்தின் நன்மைக்காக காலம் முழுவதும் ஓடிக் களைத்தவர் நீங்கள்.

அதிர்ஷ்ட தேதிகள் மற்றும் நிறங்கள்

8 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,10,19

நீங்கள் தவிர்க்க வேண்டிய தேதிகள்: 8,17,26

உங்களுக்கு உகந்த நிறம்: நீல நிறம், மஞ்சள் நிறம்.

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

உங்களுக்கான நவரத்தினக் கல்- நீலக் கல் பயன்படுத்தவும்; மேலும் இதனை தங்கத்துடன் மட்டுமே போடவும்.

தொழில் துறை- இரும்புத் தொழில் சார்ந்த உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழில்கள், அரசுத் தொழில் போன்ற துறைகள் உங்களுக்கு ஏற்ற துறைகளாகும்.

ஐயப்ப பெருமான் உங்களுக்கு உகந்த கடவுளாகும். ஐயப்ப பெருமானை மனதால் உருகி வேண்டுங்கள்.