வருகிறது ஆடிக்கிருத்திகை… பதவி உயர்வு கிடைக்க செய்ய வேண்டியது இதுதான்!

ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை எப்படி வழிபடணும்னு பார்க்கலாமா… ஆடி மாதம் அம்பாளுக்கு விசேஷம். அதே நேரம் முருகப்பெருமானுக்கும் விசேஷம். அம்பாளுக்குப் பிரியமான மகன் முருகன். அதனால் தான் பார்வதி ‘பிரியநந்தனாய…

ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் முருகனை எப்படி வழிபடணும்னு பார்க்கலாமா…

ஆடி மாதம் அம்பாளுக்கு விசேஷம். அதே நேரம் முருகப்பெருமானுக்கும் விசேஷம். அம்பாளுக்குப் பிரியமான மகன் முருகன். அதனால் தான் பார்வதி ‘பிரியநந்தனாய நமஹ’ன்னு ஒரு நாமமே உண்டு. அம்பாளுக்கு செல்ல பிள்ளை. விருப்பமான பிள்ளை. ஆடி செவ்வாய் பிள்ளையாரைக் கும்பிடுவாங்க.

சிவபெருமானுக்கும் சிறப்பு தான். ஆடி மாதத்தில் வரும் பிரதோஷங்கள் எல்லாமே சிறப்பு. நாராயணரை வழிபடும் ஆடித்தபசும் சிறப்பு. அந்த வகையில் ஆடி எல்லாருக்குமே விசேஷம்தான்.

6.8.2026 மாலை 6.18மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பித்து மறுநாள் மாலை 4.51 மணி வரை உள்ளது. இதுல அநேகமான இடங்களில் 6ம் தேதி தான் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. திருத்தணியில் ஆடிக்கிருத்திகை இந்த நாளில் தான் கொண்டாடப்படுகிறது. இரவு தங்குவது ஆறாம் தேதி தான். ஒரு சில கோவில்களில் 7ம் தேதியை ஆடிக்கிருத்திகையாகக் கொண்டாட உள்ளனர். உங்களுக்கு எது வசதியோ அந்த நாளில் கொண்டாடலாம். ஆறாம் தேதி இரவு கோவில்ல தங்குவது விசேஷம்.

நல்ல உயரிய பதவி கிடைக்கணும்னா பரணி, கார்த்திகை என இந்த இரண்டு நாளையும் இணைத்து நாம் ஒரு விரதம் இருக்க வேண்டும். அப்போது அது ரொம்ப விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும். கணவனாக இருந்து தகப்பனாக வருவதும் ஒரு பதவி தான். அதே போல மனைவியாக இருந்த தாயாக வருவதும் பதவி தான். அதனால் குழந்தைப் பேறுக்கு விசேஷமான நாள். கேட்டது கிடைக்கும்.

நினைத்தது நடக்கும் ஒரு அற்புதமான நாள் இது. ஆறாம் தேதி பரணியும், கார்த்திகையும் இருக்கு. அதனால் அந்த நாளில் விரதம் இருந்து வழக்கப்படி வழிபடலாம். அருகில் உள்ள கோவிலில் சென்று அபிஷேகம் பார்க்கலாம். நம்மால் முடிந்த பொருள்களைக் கொடுக்கலாம். சற்கோண தீபம் ஏற்றுவது சிறப்பு. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.