இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்ற சூழலில் சீனாவின் பாத்திரம் குறித்து பேசிய அரசியல் விமர்சகர் டேவிட் வேன்ஸ், “சீனா இந்த பிராந்தியத்தில் பாகிஸ்தானை தன்னுடைய பிரதிநிதியாக இயக்குகிறது. எந்த ஒரு விஷயத்திலும் சீனாவை நம்ப முடியாது. டொனால்ட் டிரம்ப் கூட இந்தியாவை நம்பும் அளவுக்கு சீனாவை நம்ப கூடாது. பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவுக்கு அமெரிக்கா அதிகமாக உதவி செய்ய வேண்டும்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பேசிய அவர், “இந்த நடவடிக்கை நீண்ட காலமாகவே தேவையாக இருந்தது. இது வெற்றிகரமாக முடிந்துள்ளது. உலக ஊடகங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. இது வெறும் பாகிஸ்தானுடன் மோதல் அல்ல, தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா அளித்த மிகப்பெரிய அடியாகும்” என்றார்.
மேலும், “பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடாகவும், பயங்கரவாதத்துக்கு ஆதாரமாக உள்ள நாடாகவும் உள்ளது. இந்தியா அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது சரியானதே’ என்றார்.
மேற்கத்திய ஊடகங்கள் இந்த மோதலை எப்படிக் கையாளுகின்றன என்பதைவிட, “அவை மிகவும் மோசமான வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளன. இந்தியா அடைந்த வெற்றிகளை மொத்தமாக புறக்கணித்துவிட்டனர். ஊடகங்களின் விமர்சனங்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது” என விமர்சித்தார்.
BBC தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “மேற்கத்திய ஊடகங்களை நம்ப முடியாது. BBC இந்தியாவிலிருந்து தடை செய்யப்பட வேண்டும். அது பெரிய அளவில் இந்தியா விரோத போக்குடன், பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது” எனக் கூறினார்.