பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபட உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக் கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
நந்தி தேவர் தனது மூச்சுக்காற்றின் வழியாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி-நந்தி, கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தை, குரு-சிஷ்யன், பசு-கன்று ஆகியோரின் குறுக்கே நாம செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி. அதனால் தான் சிவன் கோவில்களில் சுவாமிக்கும், நந்திக்கும் இடையில் குறுக்கே செல்லக்கூடாதுன்னு சொல்றாங்க.
பொதுவாக பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருக்கிறது. விரதம், வழிபாட்டை மேற்கொள்ள நாம் எந்த நாளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் வரும். விரதம், வழிபாடு மேற்கொள்வதற்கு இரவில் திதி வியாபித்து இருக்க வேண்டும் என்பது நியதி. அதனால் முதல் நாளிலேயே விரதத்தை மேற்கொள்ள வேண்டும். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.
கிருஷ்ணர் வெண்ணை திருடுவதுதான் நமக்குத் தெரியும். ஆனால் அதில் உள்ள தத்துவம் பலருக்கும் தெரியாது. அதைத் தெரிந்து கொண்டால் அவர் வெண்ணைத் திருடுவதை நாம் ஒரு திருட்டு என்று சொல்ல மாட்டோம். வெண்ணை என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கிறது. அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார். அவ்ளோதான்.