எந்தத் திசையில் விளக்கேற்றக் கூடாது? கோவில் சிற்பங்களில் ஆபாசமான சிலைகள் இருப்பது ஏன்?

ஆன்மிகம் என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது விசேஷமானது. நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கு தகுந்த பதில்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா……

ஆன்மிகம் என்பது ஒரு பெரிய கடல். இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அது விசேஷமானது. நிறைய சந்தேகங்கள் வரும். அதற்கு தகுந்த பதில்களும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா…

கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய 3 திசைகளிலும் விளக்கு ஏற்றலாம். தெற்கில் மட்டும் விளக்கு ஏற்றக்கூடாது. நம்முடைய இஷ்ட தெய்வத்தின் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம். அப்போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

உண்மையான பக்தியுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். சிவன் அடியவர்களைத் தொழுவதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் கோவில் வழிபாட்டுக்கு மட்டுமே உண்டு. ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோவில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

வீட்டில் எவ்வளவு தான் ஜெயம், ஹோமம், பூஜை செய்தாலும் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். இதனால்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று அவ்வையார் அன்றே சொல்லி இருக்கிறார்.

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை. எதையும் தவறாகச் செய்யும்போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது.

புனிதமான தாம்பத்ய உறவு இல்லைன்னா குழந்தைகள் எப்படி பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மருகம், மரம், செடி, கொடி என உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது.

இந்த நேரத்தில் தாம்பத்ய உறவு என்பது கோவில் சிலையாக வடிகக்கூடிய அளவுக்குப் புனிதமானதாகிறது. சினிமா, நாடகம், டிவி போன்றவை வந்து இந்தப் புனிதத்தை ஆபாசமாக்கியது. ஆனால் அதற்கு முன்பே கோவில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனித இனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். அதை விட்டுவிட்டு இதை வேறு கோணத்தில் சிந்தித்து ஆபாசமாக்கக்கூடாது.