சந்திரனை வணங்குவதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

முழுமதியை வணங்குவதால் மன நோய்கள் அகலுகின்றன. அமாவாசையில் இருந்து பிறை வளர்கிறது. அதிலும் மூன்றாம்பிறை தரிசனம் மிகுந்த பலனைத் தரும். சந்திரனை அமாவாசையைத் தொடர்ந்து பிறை வருவதில் இருந்து பௌர்ணமி வரை வணங்கலாம். எப்படி…

முழுமதியை வணங்குவதால் மன நோய்கள் அகலுகின்றன. அமாவாசையில் இருந்து பிறை வளர்கிறது. அதிலும் மூன்றாம்பிறை தரிசனம் மிகுந்த பலனைத் தரும். சந்திரனை அமாவாசையைத் தொடர்ந்து பிறை வருவதில் இருந்து பௌர்ணமி வரை வணங்கலாம். எப்படி வணங்குவதுன்னு பார்க்கலாமா…

ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி, அதன்மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு, மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

அப்போது இறைவனை மும்மூர்த்தியாக பாவித்து வணங்க வேண்டும். அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும். தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு மற்றும் தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும்.

பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் வெளிச்சம் இருக்கும்போது நம் கண்களுக்கு புலப்படாது. சந்திர பகவானை தரிசனம் செய்வதற்கு முன்பாகவே, உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகை, ஒரு ரூபாய் நாணயம் இவை இரண்டையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சந்திரனை பார்க்கும்போது தங்க ஆபரணத்தையும், ஒரு ரூபாய் நாணயத்தையும் உள்ளங்கைகளில் வைத்து, அதன் பின்பு சந்திர பகவானை தரிசனம் செய்ய வேண்டும். மேலும் சந்திரனிடமும், வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும்போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவதாகும்.

ஸ்ரீகிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனுதினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். அதனால் அடி பணிந்து முழு மனதோடு வணங்க வேண்டும்.

இவ்வாறு வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும். பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்க வேண்டும். இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம்…. ஆயுளுக்கும் செய்து வந்தால் வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும்…