பைலட் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் இடையேயான விரைவான முடிவெடுப்பும், சிறந்த தொடர்பும், இந்த சம்பவத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. ATC பருவநிலை குறித்து முன்னே கூறியிருந்தாலும், பைலட் இறுதிநிமிடத்தில் நிலையை மதித்து தரையிறங்குவதை கைவிட்டு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தினார். பயணிகள் இந்த அனுபவத்தால் அதிர்ச்சியடைந்தாலும், விமானியின் சாமர்த்தியத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்த சம்பவத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. விமானம் தரையிறங்காமல் திரும்பிய சூழ்நிலைகளை ஆய்வு செய்து, அனைத்து பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை DGCA பரிசீலிக்கும்.
மேலும், பைலட் இந்த முடிவை எடுப்பது சரியானதா, மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் போதுமானதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.